Wednesday, 10 May 2017

Healthy Foods to Eat that Particularly for Children | Organic Living



உங்கள் குடும்பம் மீது அதிக அன்பும் அக்கறையும் உள்ளவரா நீங்கள்ஆம் என்றால், அந்த அன்பையும் அக்கறையும் நீங்கள் எதில் காட்ட வேண்டும் என்று தெரியுமா? அவர்கள் சாப்பிடும் உணவில்.
        இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் உணவு முறையே மாறிப் போச்சுஒரு 40 சதவீதம் கூட குழந்தைகள் சாப்பிடும் உணவில் ஆரோக்கியமில்லை. அதனால் நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு தினமும் வேர்க்கடலை, பேரிச்சம் பழம் போன்றவற்றை ஸ்நாக்ஸா கொடுங்கள். வாரம் மூன்று முறை கீரையைப் பருப்புக் கூட்டாகவும், ராகியை சேமியாகவும், கொழுக்கட்டையாகவும், ரொட்டியாகவும் கொடுக்கவும்.
        ஆப்பிள், ஆரஞ்சு இதை விட பப்பாளிப் பழம், கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். இதை கட்டாயம் தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவும். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல்  வீட்டிலிருக்கும் பெண்களும் தினமும் 5 பேரிச்சம்பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கறுப்பு உளுந்து இந்த உணவு வகைகளை எல்லாம் பெண்களுக்கு நல்லது.
        இதை போல ஆண்களும் கூட ப்ரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதை அறவே தவிர்த்து விடுங்கள். காய்கறிகளோ இல்ல, இறைச்சியோ பிரஷ்ஷா வாங்கி சமைத்து சாப்பிடவும். சீரகத் தண்ணீர், மண்பானை தண்ணீர், செப்பு பானைத் தண்ணீர் குடிப்பது, இரும்புக் கடாயில் சமைப்பது, பாக்கெட் ஆயில் பயன்படுத்தாமல் மரசெக்கில் போய் எண்ணெய் வாங்கி பயன்படுத்துவது, இந்த நடைமுறைகள் எல்லாமே எல்லாருக்கும் நல்லது. நடைமுறைப்படுத்தி பார்க்கலாமா தோழர்களே….!



Healthy Foods to Eat that Particularly for Children | Organic Living https://youtu.be/-Dz1xzU_PTs