Thursday, 29 June 2017
பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்சனையா | பெண்களின் மானத்திற்கு ஓரு சவால்|...
பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்சனையா | பெண்களின் மானத்திற்கு ஓரு சவால்|Women Freedom|Organic Living https://youtu.be/l_JgPqfIPms
Thursday, 22 June 2017
BPகும் Cholesterol கும் நிரந்தர தீர்வு | Home Remedy for High BP and Ch...
BPகும் Cholesterol கும் நிரந்தர தீர்வு | Home Remedy for High BP and Cholesterol | Organic Living https://youtu.be/hmbaZ-v3ka8
Wednesday, 21 June 2017
Monday, 19 June 2017
48 நாள் ஒரு மண்டலம் ஏன் சக்தி வாய்ந்தது | why 48 days is powerful | Orga...
48 நாள் ஒரு மண்டலம் ஏன் சக்தி வாய்ந்தது | why 48 days is powerful | Organic Living https://youtu.be/sMYFTc90wNU
பப்பாளி மருத்துவ குணங்கள் | Papaya Health benefits | பார்த்து பகிருங்கள்...
பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் நன்மை தரும் பழம் என்று சொன்னால் அது பப்பாளிதான்.
பப்பாளியில் கரோட்டின் என்னும் சத்து அதிகமாக இருக்கின்றது. இது நம் உடலில் செல்லும் போது வைட்டமின் ஏ வாக மாறும். அது மட்டுமல்லாமல் உடலுக்கு மிக முக்கியமான சத்தான வைட்டமின் சத்து சி, இதில் அதிகமாக உள்ளது. இந்த பப்பாளியை நாம் அன்றாடம் சாப்பிட்டு வந்தோம் என்று சொன்னால், நமக்கு மலசிக்கல் இருக்காது. வயிற்றுக் கடுப்பு இருக்காது. செரிமாண தன்மை பிரச்சனை இருக்காது. அமிலங்கள் பிரச்சனை இருக்காது. பித்தத்தைப் போக்கும். உடலுக்கு மிகவும் தெம்பாக இருக்கும்.
இதயத்திற்கு நல்லது. மன நோய்களை குணமாக்கும். கல்லீரலுக்கு ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர் கோளாறிலிருந்து நம்மை விடுவிக்கும். கல்லீரல் கோளாறிலிருந்து நம்மை விடுவிக்கும். மாதவிலக்கு பிரச்சனையை இது சரி செய்யும். இரத்த சோகையிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது. அது மட்டுமல்லாமல் கல்லீரல் வீக்கமடைந்தது என்று சொன்னால், பப்பாளிதான் அதற்கு சரியான மருந்து. பழுக்காத பச்ச பப்பாளியின் துண்டுகளையும், சாறுகளையும் நாம் சாப்பிட்டோம் என்று சொன்னால், உடலில் உள்ள வட்டப் புழுக்களை அது வெளியேற்றி விடும்.
இந்த பப்பாளியில் பப்பாயின் என்னும் என்சைம் உள்ளது. இந்த என்சைம்களில் 3 விசயங்கள் அடங்கி உள்ளது. முதலாவதா ஆர்ஜிநைன், இதில் ஆண்களுக்கான உயிர் உற்பத்தி திறனை மேம்படுத்துகின்றது. இரண்டாவதாக கார்பின் இது இதயத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். மூன்றாவதாக பைட்ரின் இது இரத்தம் உறைதலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இந்த பப்பாளியில் நிறைய என்சைம்கள் உண்டு. இது புற்றுநோயை முற்றிலுமா குணப்படுத்த உதவுகின்றது. மனிதனுடைய இளமை பொலிவை அதிகப்படுத்துவதில் வல்லது. நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை பப்பாளி சுத்திகரிக்கின்றது. விரதம் இருக்கும் நாட்களில் பப்பாளிச் சாறையோ, வெள்ளரி சாறையோ நாம் மாறி மாறி குடிக்கும் போது, உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு மிகவும் உதவுகின்றது. பொதுவாகவே காய்ச்சல் வரும்போது மருத்துவரிடம் செல்கின்றோம். மருத்துவர் காய்ச்சல் நீங்க ஆன்டிபையாட்டிக் ஒன்று தருவார். ஒருமுறை நாம் ஆன்டிபையாடிக் எடுத்துக் கொண்டோம் என்று சொன்னால், பப்பாளியை நாம் நிறையாக சாப்பிடவேண்டும். ஏனென்றால், குடல் தசைகளில் அழிக்கப்பட்டுள்ள நல்ல பாக்ட்ரீயாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதில் பப்பாளி பெரும் பங்கு வகிக்கின்றது.
அது போல நன்றாக பழுத்த பப்பாளி பழத்தில் உள்ள விதைகள் குடல் புழுக்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. உடனே தாகத்தை தீர்ப்பதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. மிக முக்கியமாக பப்பாளி இலைகளோட பொடிகள் யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக இருக்கின்றது.
சில பழ வகைகள் சீசனுக்கு மட்டும்தான் கிடைக்கும். ஆனால், வருடம் முழுவதும் கிடைக்கின்றதென்றால் அது பப்பாளி மட்டும்தான். இது மட்டுமல்லாமல், இன்னும் நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு இந்த பப்பாளியில். பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இந்த பப்பாளி சரி செய்யும். சிறுநீர்பையில் உள்ள கற்களை கரைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். ஆண்மை தன்மையை பலப்படுத்தும். இரத்த விருத்தியை உண்டாக்கும். ஞாபக சக்தியை பலப்படுத்தும்.
முக்கியமாக மாதவிடாய் பிரச்சனையில் இன்றைய காலத்து பெண்கள் இருக்கின்றார்கள். இந்த பப்பாளியை சரியாக சாப்பிட்டு வந்தால் இந்த குறைபாடுகள் முழுமையாக நீங்கும். அடிக்கடி இந்த பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களும் அவர்களுக்கு வராது. தொற்று நோய்கள் பரவினாலும் அவர்களை தாக்காது. ஏனென்றால் பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை அழிக்கக் கூடிய சத்துக்கள் உள்ளன.
இந்த பப்பாளியை சாப்பிடுவதால் இரத்தத்தில் விஷக் கிருமிகள் தங்கி நோயை உண்டாக்குவதற்கு வாய்ப்பே இல்லை. பப்பாளி பழம் என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். எனவே பப்பாளி பழத்தை சாப்பிடுவோம் ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்திடுவோம்.
பப்பாளி மருத்துவ குணங்கள் | Papaya Health benefits | பார்த்து பகிருங்கள் | Organic Living https://youtu.be/z0H2sfFGO18
Subscribe to:
Posts (Atom)