Tuesday, 26 September 2017

மூலிகை உடலியக்க மருத்துவம் | யோகம் | Yogam





மூலிகை உடலியக்க மருத்துவம் | Herbal Health Treatment | யோகம் | Yogam  https://youtu.be/c3JcgE7QfAQ

Monday, 25 September 2017

2 நிமிடத்தில் நூடில்சுடன் காத்திருப்பது ஆபத்தா ஆரோக்கியமா | is Noodles g...





2 நிமிடத்தில் நூடில்சுடன் காத்திருப்பது ஆபத்தா ஆரோக்கியமா | is Noodles good or bad | Yogam https://youtu.be/g6-N7mg94eA

திருக்குறள் தாத்தா கணேசன் | தமிழ் தாத்தா | Tirukkural Thaatha Ganesan | ...





திருக்குறள் தாத்தா கணேசன் | தமிழ் தாத்தா | Tirukkural Thaatha Ganesan | Tamil Vaalga https://youtu.be/Iy2nv0En6E0

Sunday, 24 September 2017

ஆரோக்கியமாயிருக்க இவ்வளவு மருத்துவமா | Lot of Treatment for healthy body...





ஆரோக்கியமாயிருக்க இவ்வளவு மருத்துவமா | Lot of Treatment for healthy body | Organic Living https://youtu.be/n1VvcCKJQ6Y

Saturday, 23 September 2017

⁠⁠⁠⁠⁠கைகண்ட அனுபவ மருத்துவம்!



(#கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-



கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!



நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.



அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."



#சிலஎளியமருத்துவம்: !!!



#வயிற்றுவலிக்கு:




முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.



#இடுப்பில்வரும்வண்ணார்_புண்:




இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.



#கண்நோய்:

கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.


#டான்சில்ஸ்:

சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.



#தேள்_கொட்டினால்:

கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.



#வயிற்றில்உள்ளநாக்குபூச்சி_போக:

வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.



#தொண்டைக்_கம்மலுக்கு:

சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.



#ஒற்றைத்_தலைவலி :

மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.



#கல்லீரல்_வீக்கம்:

கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.



#கக்குவான்_இருமல்:

அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.



#குடல்_வாதம்:

முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.



#தாது_விருத்தியாக:

முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.



#ஜலதோஷம்:

பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.



#வயிற்றில்_கட்டி:

வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.



#தலையில்புழுவெட்டு :

1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.



பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.



#வெண்குஷ்டம் :

மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.



#காலராவைத்_தடுக்க:

காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.



#கடுமையான_சுளுக்கு:

சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.



#காதிலசீழ்வடிதல்:

எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)



#காலில்_ஆணி:

ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.



#பல்வலி :

1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும்.

2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.



#வழுக்கைத்தலையில்முடி_வளர:
காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.



#நாட்டுப்புற_மருந்துகள்


நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.


#மகளிர்_மருத்துவம்





திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :


1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.


2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.


3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.


4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.


5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.


திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.


1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.


2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.


3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.


4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.


#ஆடவர்_மருத்துவம்





ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :


1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.


2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.


3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.


4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.


5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.


#குழந்தையர்_மருத்துவம்



அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.


1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.


2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.


3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.


4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.


5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.


#பொது_மருத்துவம்



ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :


1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.


2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.


3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.


4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.


5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.


#கால்நடை_மருத்துவம்



கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.


1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.


2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.


3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.



#நாட்டுப்புறமருத்துவத்தின்சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.


குறைந்த கார்போஹைட்ரேட் உணவை உண்பதற்கு வழி என்ன?🎙

ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆகவே உடல் எடை குறைப்பிற்காக அல்லது உடல் வடிவ மாற்றத்திற்காக டயட் இருக்க நினைப்பவர்கள் அவர்களின் உடல் நிலைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி டயட்டை ஆரம்பிக்க வேண்டும்.

லோ கார்போ டயட் என்னும் குறைந்த கார்போ ஹைட்ரட் உணவுகளை எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் கீழே கூறப்பட்டிருக்கும் முறைகளை பின்பற்றலாம்.⬇




🌐உங்கள் உணவு பட்டியலில் இருந்து கார்போ ஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது சற்று கடினமான செயல் தான். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் இந்த டயட் போக போக பழகி விடும்.⬇




🌐கார்போ அதிகம் உள்ள உணவுகளை முடிந்த அளவு காலை நேரத்தில் உண்ணுவது சிறந்தது. அந்த நாளில் நாம் செய்யும் வேலைகளால் அவை எளிதில் எரியூட்டப்படும். காலை நேரத்தில் உடலில் ஆற்றலும் அதிகமாக தேவைப்படும்.⬇




🌐ஒரேநேரத்தில் முழுமையாக கார்போ உணவுகளை கை விடாமல், ஸ்டார்ச் அதிகமுள்ள உணவுகளை முதலில் குறைக்க வேண்டும்.⬇




🌐முழுமையாக கார்போ உணவுகளை தவிர்ப்பதைவிட , நார்ச்சத்து அதிகம் உள்ள காம்ப்லெக்ஸ் கார்போ உணவுகளை உண்ணலாம்.⬇




🌐பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டுடன் ஊட்டச்சத்துகளும் இருக்கும். கலோரிகளும் குறைவாக இருக்கும். ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட இவை மேலானது.⬇




🌐சர்க்கரை அதிகமாக இருக்கும் கார்போ உணவை சுவைக்க நினைக்கும்போது நீங்களே சமைத்து உண்ண வேண்டும் என்று முறையை பின்பற்றலாம்.⬇




🌐நாள் முழுதும் பசி தெரியாமல் இருக்க புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணலாம்.⬇




🌐பிஸ்சா உணவை விரும்பி உண்ணுவோர், மாவிற்கு மாற்றாக போர்டோபெல்லோ மஷ்ரூமை பயன்படுத்தி பிஸ்சா தயாரிக்கலாம்.⬇




🌐கார்போ குறைந்த உணவுகளில் பட்டர் மற்றும் சீஸ் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.குறைந்த கொழுப்பு உணவை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.பாஸ்தாவை உண்ணுவதை விட spiraliser மூலம் கேரட் போன்ற காய்கறிகளை பாஸ்தா போல் துருவி உண்ணலாம்.குறைந்த கார்போ உணவுகளுடன் முட்டை சேர்த்து உண்ணலாம்.மாவிற்கு மாற்றாக தேங்காய் மற்றும் பாதாம் கொண்டு மாவு தயாரிக்க பழகி கொள்ளுங்கள்.காலிப்ளவரை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.குறைந்த கார்போ ஸ்னாக்ஸ்களை பசிக்கும் போது எடுத்துக் கொள்ளுங்கள்.மைபிலேட் , மை பிட்னெஸ் பால் போன்ற ஆப் களை பார்த்து உணவுகளின் விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.காபியை சர்க்கரை இல்லாமல் பால் இல்லாமல் குடிக்க பழகுங்கள்.மிகவும் பிடித்த கார்போ உணவுக்கு மாற்றாக குறைந்த கார்போ உணவை உண்ண தொடங்குங்கள்.ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளியில் குறைந்த அளவு உணவை உண்ணுங்கள்.⬇




🔚மேலே கூறியவை எல்லாமே செய்வதற்கு கடினமான ஒன்று தான். ஆனால் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால் எளிதில் செய்ய கூடிய ஒன்றாகும்.🏁

உடல் உறுதிக்கு கேப்பையை வாங்கி சாப்புடுங்க |How to maintain good health ...





உடல் உறுதிக்கு கேப்பையை வாங்கி சாப்புடுங்க |How to maintain good health Using Raagi |Organic Living https://youtu.be/2ZSBDinqhW4

Friday, 22 September 2017

கூக்குரல் Tamil Short Film | Kookural | விவசாயி தற்கொலை | வேலையில்லா திண...





கூக்குரல் Tamil Short Film | Kookural | விவசாயி தற்கொலை | வேலையில்லா திண்டாட்டம் | வருமானம் | Takkar https://youtu.be/GUQ8ip46Evk

வாழையிலையில் சாப்பிடுவது இவ்வளவு நன்மையா | How Banana Leaf make food Hea...





வாழையிலையில் சாப்பிடுவது இவ்வளவு நன்மையா | How Banana Leaf make food Healthier | Organic Living https://youtu.be/LxPCIAuiqOU




Thursday, 21 September 2017

கொலஸ்ட்ராலை கரைக்கும் இயற்கை வினிகர் | How to remove cholesterol natural...





கொலஸ்ட்ராலை கரைக்கும் இயற்கை வினிகர் | How to remove cholesterol naturally | Organic Living https://youtu.be/7nfCoaCyFBk

செவ்வாய் தோஷமும் அறிவியல் ரகசியமும் ஆரோக்கியமும் | Science Behind Sevvai...





செவ்வாய் தோஷமும் அறிவியல் ரகசியமும் ஆரோக்கியமும் | Science Behind Sevvai Thosham | Organic Living https://youtu.be/p--Fgnf-aGM

Bitcoin - Next level Currency



மேலும் இதை பற்றிய முழு தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள் Click this link -> https://youtu.be/eldRcSJkD0o

உங்களால் முடிந்தால் இதில் ஒரு முதலீடு செய்து வையுங்கள்.. கீழிருக்கும் App ஐ download செய்து கொள்ளுங்கள் எப்போது முடியுமோ invest செய்து கொள்ளுங்கள்


Get bitcoins worth ₹100 free on your first bitcoin buy or sell with referral code 'REF33447601'. Download the app:
http://link.zebpay.com/ref/REF33447601

Wednesday, 20 September 2017

தலையணையில்லாமல் தூங்கினால் இவ்வளவு ஆரோக்கியம்| How healthy sleeping with...





தலையணையில்லாமல் தூங்கினால் இவ்வளவு ஆரோக்கியம்| How healthy sleeping without Pillow | Organic Living https://youtu.be/5BTh2EmpBqw