Yogam Media offers Tamil health, wellness, trends, spirituality & entertainment content across multiple YouTube channels.
Thursday, 21 September 2017
கொலஸ்ட்ராலை கரைக்கும் இயற்கை வினிகர் | How to remove cholesterol natural...
கொலஸ்ட்ராலை கரைக்கும் இயற்கை வினிகர் | How to remove cholesterol naturally | Organic Living https://youtu.be/7nfCoaCyFBk
செவ்வாய் தோஷமும் அறிவியல் ரகசியமும் ஆரோக்கியமும் | Science Behind Sevvai...
செவ்வாய் தோஷமும் அறிவியல் ரகசியமும் ஆரோக்கியமும் | Science Behind Sevvai Thosham | Organic Living https://youtu.be/p--Fgnf-aGM
Bitcoin - Next level Currency
மேலும் இதை பற்றிய முழு தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள் Click this link -> https://youtu.be/eldRcSJkD0o
உங்களால் முடிந்தால் இதில் ஒரு முதலீடு செய்து வையுங்கள்.. கீழிருக்கும் App ஐ download செய்து கொள்ளுங்கள் எப்போது முடியுமோ invest செய்து கொள்ளுங்கள்
Get bitcoins worth ₹100 free on your first bitcoin buy or sell with referral code 'REF33447601'. Download the app:
http://link.zebpay.com/ref/REF33447601
http://link.zebpay.com/ref/REF33447601
Wednesday, 20 September 2017
தலையணையில்லாமல் தூங்கினால் இவ்வளவு ஆரோக்கியம்| How healthy sleeping with...
தலையணையில்லாமல் தூங்கினால் இவ்வளவு ஆரோக்கியம்| How healthy sleeping without Pillow | Organic Living https://youtu.be/5BTh2EmpBqw
Tuesday, 19 September 2017
👉🎙பெருநகர மக்களை வாட்டும் வைட்டமின் ‘‘டி’’ வைட்டமின் குறைபாடு🎙
✅🔈🔈✅⤵
அதிகாலையில் எழுந்த குறைந்தது அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வதை விருப்பமாக இல்லாமல் நிர்பந்தமாகவே நினைக்கிறார்கள் இந்தியர்கள்.
நீங்கள் எந்த ஒரு தகுந்த காரணமும் இன்றி தொடர்ந்த உடல் வலி மற்றும் எப்பொழுதும் சோர்வாக இருப்பது போன்று உணருகிறீர்களா? அப்ப’டி’யென்றால், உங்கள் உடல் குறிப்பிடத்தகுந்த அளவு வைட்டமின் ‘‘டி’’ குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.⤵
⏳சென்னையில் 0 முதல் 80 வயதுவரை உள்ள 1 லட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளின் தரவுகளை ஆய்வு செய்து கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆராய்ச்சி வைட்டமின் ‘‘டி’’ பிரச்சினையின் அதிர்ச்சியூட்டும் அளவை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.⤵
⏳சோதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் (60%) வைட்டமின் குறைபாடு அறிகுறிகளை வெளிப்படுத்தினர். மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேருக்கு குறைபாடு இருப்பதாக அறிவிக்கப்பட்’டி’ருந்தாலும். அரிதாக 1% பேர் உயிர்ச்சத்து மிகைப்பு (ஹைப்பர் விட்டமினோஸிஸ்) நோயால் பாதிக்கப்படுகின்றனர்.⤵
⏳16% நபர்கள் மட்டுமே போதுமான அளவில் வைட்டமின் ‘‘டி’’ சத்தை கொண்’டி’ருந்தனர். இருப்பினும் அதிர்ச்சியளிக்கக் கூ’டி’ய விதமாக இந்த பிரிவில் 10 லிருந்து 20 வயதுடைய இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைந்து காணப்பட்டது. வைட்டமின் ‘‘டி’’ யின் அவசியத்தை விளக்குகிறார் மருத்துவர் அனிதா சூரியநாராயண்.... ⤵
🌞“சூரியஒளி வைட்டமின்” (சன்ஷைன் வைட்டமின்) என்ற புகழைப்பெற்ற வைட்டமின் ‘டி’ சத்து சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் உடல் தோல்பரப்பின் எதிர்வினையால் தயாரிக்கப்படுகிறது.இயற்கையில் இது மிக அபூர்வமாக நிகழ்கிறது. மற்றப’டி’ மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆன உணவுகள் மட்டுமே வைட்டமின் ‘டி’ யின் முக்கிய மூலாதாரமாக கருதப்படுகிறது. ⤵
⏳கொழுப்பில் கரையக்கூ’டி’ய தன்மையைக் கொண்டுள்ள வைட்டமின் ஆதலால் அது உடலின் திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டு நமது உணவிலுள்ள கால்சியத்தை பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. வைட்டமின் ‘டி’ குறைபாடு, அல்லது போதிய அளவு இல்ல்லாதிருப்பது எலும்புச் சுண்ணாம்புப் ப’டி’வம் அடைவதற்கு இட்டுச் சென்று எலும்புகள் வலுவிழக்கும் நோய் உண்டாக காரணமாகிவிடும்.⤵
⏳உதாரணமாக குழந்தைகள் மத்தியில் என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) பொதுவாக காணப்படுவதற்கு தீவிர குறைபாடு காரணமாகவும் மற்றும் வயதானோருக்கு ஏற்படும் எலும்பு நலிவு(ஆஸ்’டி’யோமலாசியா) மற்றும் எலும்புப்புரை(ஆஸ்’டி’யோபோரோஸிஸ்) ஆகிய நிலைகள் முக்கிய காரணமாகவும் விளங்குகின்றது.⤵
⏳இந்த ஊட்டச்சத்து இயற்கையாகவே பெருமளவு கிடைக்கப்பெறும். நிலையிலுள்ள மக்கள் மத்தியில் அதிகமானோர் இதன் குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பது கண்டு ஆச்சரியப்படுவது மிக சுலபமே. இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகிலும் சமீப காலத்தில் ஏற்றம் கண்டுள்ள வைட்டமின் ‘டி’ சத்துக் குறைபாடுக்கு காரணமாக உடலுழைப்புக்குறைவு மற்றும் மூ’டி’ய அறைக்குள் பணிகளை மேற்கொள்ளும் வாழ்க்கை முறை ஆகியவற்றை சுட்’டி’க்காட்டலாம். ⤵
⏳மக்கள் தொகையில் பெரும்பாலானோர் அறைக்குள் மேசைகளில் உட்கார்ந்து பணி செய்வது அவர்களின் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி சூரிய ஒளிக்கு உடல் வெளிப்படுத்தப்படுவதையும் தவிர்க்கிறது. தற்காலக் குழந்தைகள் காலையிலிருந்து மாலை வரை பந்தை உதைத்து வியர்வை சொட்டச் சொட்ட விளையாடுவதை கைவிட்டு கணினியில் எணணியல் விளையாட்டுக்களை விளையாடத்தொடங்கி விட்டனர். கலப்பட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகளவில் உட்கொள்ளுவதும் நமது உடலை வலுவிழக்கச் செய்கிறது. மேலும் அதுவே வைட்டமின் ‘டி’ சத்து சேர்க்கையை குறைவடையச் செய்கிறது. ⤵
⏳இந்தக் குறைபாட்டை அடையாளம் கண்டு ஆரோக்கியக்கேட்டை தவிர்ப்பதற்கு முக்கியமான சவால்களாக திகழ்வது பெரும்பான்மை மக்கள் தாங்கள் இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பது குறித்து எந்த வித விழிப்புணர்ச்சியும் இன்றி இருப்பதுதான். மக்கள் வெகு சுலபமாக அதன் அறிகுறிகளான களைப்பு மற்றும் உடல்வலி ஆகியவற்றுக்கு மனஅழுத்தம்தான் காரணம் என்று புறக்கணித்து விடுகிறார்கள்.⤵
⏳இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகளில் சூரிய ஒளிக்கு 30 நிமிடங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொண்டாலும் உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் ‘டி’ சத்து கிடைப்பதில்லை என்று கண்டுபி’டி’க்கப்பட்டுள்ளது. இதற்கு விடையளிக்கும் மற்றும் ஒரு கோட்பாடாக கருதப்படுவது என்னவென்றால் நமது இனம் சார்ந்த கருமை நிறமும் அதன் காரணமாகவே அதிகளவில் பயன்படுத்தப்படும் சூரியக்கதிர்களை தடுக்கும் பொருட்களும்அ’டி’ப்படைக் காரணங்கள் எதுவாக இருந்தாலும் வைட்டமின் ‘டி’ ஊட்டச்சத்து ஏற்றம் பெற்ற துணை உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுவதன் தேவை தெளிவாகத் தெரிகிறது. ⤵
⏳வைட்டமின் ‘டி’ சத்தை அதிகமாக தன்னுள் கொண்ட சில உணவு வகைகளாவன மீன், மாட்டு ஈரல், முட்டை மஞ்சள் கரு, ஆகியவை. இது தவிர சைவ உணவு உட்கொள்ளுபவர்கள் பாதாம் பால், சேயாபால், ஆரஞ்சுப் பழச்சாறு, நவதானியங்கள், மற்றும் காளான் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.⤵
⏳நவீன நகர வாழ்க்கை முறை சரியான உணவுகளை உட்கொள்ள நம்மை அனுமதிப்பதில்லை. அல்லது வைட்டமின் ‘டி’ சத்தை உருவாக்க தேவையான சூரிய ஒளியை பெறுவதற்கு நமக்கு நேரத்தை அளிக்காது ஆகவே , விட்டமின் ‘டி’ குறைபாடு அல்லது அளவு குறைந்திருக்கிறதா என்று .சோதனை செய்து கொண்டு அந்த நிலையை சீர்படுத்த மருத்துவ உதவியை நாடுவது மிக முக்கியமான ஒன்றாகும்.🏁
மூலிகைகளும் அதன் சத்துக்களும்
1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து
ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

நோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்
அதிமதுரம்
Glycyrhiza Glabra
தீரும் நோய்கள்: இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
அமுக்கராக் கிழங்கு
Withania Somnifera
தீரும் நோய்கள்: உடல் எடை அதிகரிக்க, உடல் அசதி, மூட்டுவலி, தூக்கமின்மை.
அசோகு
Saraca Indica
தீரும் நோய்கள்: கருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.
அம்மான் பச்சரிசி
Euphorbia Hirta
தீரும் நோய்கள்: முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.
அருகம்புல்
Cynodon Dactylon
தீரும் நோய்கள்: இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம், உடல் அரிப்பு, நமைச்சல், வெள்ளைப்படுதல்.
அரிவாள்மனை பூண்டு
Sida Acuta
தீரும் நோய்கள்: காயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச.
அவுரி
Indigofera Tinctoria
தீரும் நோய்கள்: பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை, தோல் நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி).
ஆடாதோடை
Adhatoda Zeylanica
தீரும் நோய்கள்: சளி, இருமல், தொண்டைக் கட்டு.
ஆடுதீண்டாபாளை
Aristolochia Bracteolata
தீரும் நோய்கள்: தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.
ஆரை
Marselia Quadrifida
தீரும் நோய்கள்: சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.
ஆவாரை
Cassia Auriculata
தீரும் நோய்கள்: நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங் கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்.
இஞ்சி
Zingiber Officinale
தீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.
இம்பூரல்
Oldenlandia Umbellata
இரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு கட்டுபடுத்த.
உத்தாமணி (வேலிப்பருத்தி)
Pergularia Daemia
தீரும் நோய்கள்: குழந்தைகளுக்கு செரியாமை (அஜீரணம்), மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு.
உத்திராட்சம்
Elaeocarpus Scarius
தீரும் நோய்கள்: குழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு, இடைவிடாத விக்கல், கோழை.
ஊமத்தை
Datura Metel
தீரும் நோய்கள்: புண்களுக்கு வெளிப்பூச்சு மட்டும்.
எருக்கன்
Calotropis Gigantea
தீரும் நோய்கள்: தேள், குளவி, பூச்சிகளின் விஷக்கடி, கட்டிகளுக்கு மேல் பூச்சு.
எள்
Sesamum Indicum
தீரும் நோய்கள்: உடற்சூடு, தலைப் பாரம் குறைய.
ஏலக்காய்
Elettaria Cardamomum
தீரும் நோய்கள்: அஜீரணம், குமட்டல், வாந்தி.
ஓதியன்
Lannea Coromandelica
வாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி.
ஓமம்
Carum Roxburghianum
தீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம்.
ஓரிதழ் தாமரை
Hybanthus Enneaspermus
தீரும் நோய்கள்:சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்.
எல்லா நோய்க்கும் ஒரே மருந்து முப்பு | Muppu Medical Miracle | Organic Li...
எல்லா நோய்க்கும் ஒரே மருந்து முப்பு | Muppu Medical Miracle | Tamil siddha medicine | Organic Living
Saturday, 16 September 2017
புரட்டாசி மாதமும் அசைவமும் விஞ்ஞான ரகசியமும் | Why No Non Veg in Puratta...
புரட்டாசி மாதமும் அசைவமும் விஞ்ஞான ரகசியமும் | Why No Non Veg in Purattasi | Organic Living https://youtu.be/VNWpWBkRuNU
"Water Water Water" Award Winning Short Film | Niruban Chakravarthi | Takkar
From the year of 2000 till 2040 how water is sufficient....Please watch and Share
A Short film that took 25 Minutes to Think, Make, Edit and Publish
Concept , Camera, Editing : Niruban Chakravarthi
மேலே உள்ள காணொளியை பாருங்கள்
கண்ணீரையாவது சேமித்து வை, தண்ணீர் துளிகாக அழும் காலம் வரும் அப்போது தாகம் தீர்த்துக்கொள்ள உதவும்....

நிருபன் சக்ரவர்த்திதண்ணீர்! தண்ணீர்!!
பலருக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்
சிலருக்கு ஒருநேர பசியைத் தீர்க்கிறது
நீரின்றி அமையாது உலகு,
உண்மைதான்,
பஞ்சம் தண்ணீருக்கு மட்டுமல்ல அதனால்
கண்ணீருக்கும் தான்
ஆற்றிலும் ஓடையிலும் பார்த்த நல்ல தண்ணீரை
இன்று பாட்டிலிலும் பாக்கெட்டிலும் பார்க்கும் அவலம்,
நாளை தலைமுறை எதில் பார்க்கும்?
காடுகளை காத்து மரங்களை வளர்த்து
மனிதத்தோடு தாவரங்களையும் காப்போம் என இந்நாளில் உறுதி ஏற்போம்,!!!

Friday, 15 September 2017
உமிழ் நீர் நம் உயிர் காக்கும் அமிர்தம் | Use Saliva and Protect Life | ...
உமிழ் நீர் நம் உயிர் காக்கும் அமிர்தம் | Use Saliva and Protect Life | Health Tips | Organic Living https://youtu.be/2SxQY4Twblw
Thursday, 14 September 2017
மூட நம்பிக்கைகளின் உண்மை அர்த்தங்கள்
நம் மக்களிடையே ஆண்டாண்டு காலமாக பல மூட நம்பிக்கைககள் பரவலாக இருந்து வருகிறது. ஏன் செய்கிறீர்கள்? எதற்கு ? என்னவென்று காரணம் கேட்டால், அதற்கு சாஸ்திரத்தையும், ஆன்மீகத்தையும் பதிலாய் சொல்கிறார்கள். அப்படி பின்பற்றி வரும் சில மூட நம்பிக்கைகளில் சிலவற்றை இணையத்தில் படித்து உண்மையான காரணங்களை எழுதியுள்ளேன்.
1.) பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது ஏன் ?
பாம்பு புற்றுகள் பெரும்பாலும் அம்மன் கோவில்களில் இருக்கும். மேலும் பாம்புக்கு பாலும் முட்டையும் பிடிக்கும். நாம் அதை வைத்து படைத்தால் , முட்டையையும் பாலையும் குடித்து விட்டு, நாம் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும். இதைதான் நாம் பல படங்களிலும் பார்த்துள்ளோம்.
உண்மை காரணம் - ஆதி காலத்தில் நாடெங்கும் புதர்களும், காடுமாய் இருந்தது. மனிதன் நடமாட்டத்தை விட பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பெண் பாம்புகளின் மேல் ஒரு வித திரவ வாசம் வரும். அதை வைத்து கொண்டு ஆண் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக வரும். பாம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணி, முட்டையும் பாலும் அதன் புற்றில் ஊற்றினார்கள். இவை இரண்டுக்கும் பாம்பின் மேல் வரும் அந்த வாசத்தை போக்கும் திறன் உண்டு. அதனால் தான் பாம்பு புற்றிற்கு பால் ஊற்றுகிறார்கள். உண்மையில் பாம்புகள் பாலை குடிக்காது.
2.) மாலை நேரத்தில் ஏன் வீடு பெருக்க கூடாது ?
மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், வீட்டுக்கு நல்லதல்ல. துர்தஷ்டம் வந்து சேரும் என நம்பிக்கை. அதேபோல் மாலை நேரத்தில் நகம் வெட்டினாலும், வீட்டுக்கு தரித்திரம் வந்து சேரும் என சொல்வதுண்டு.
உண்மை காரணம்- மின்சாரம் கண்டுபிடிக்காமல் இருந்த காலத்தில், மாலை நேரத்தில், இருட்டிய பின் வீட்டை பெருக்கினால் குப்பைகளோடு ஊசி, தோடு/திருகாணி போன்றவை ஏதாவது சேர்ந்து காணாமல் போக வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல் நகம் வெட்டி கூட்டி பெருக்கும் போதும் முக்கிய பொருட்கள் குப்பைக்கு போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் மாலை நேரத்தில் வீடு பெருக்க கூடாது என சொல்வார்கள்.
3.) இருட்டிய பின் ஏன் பூப்பறிக்க கூடாது ?
மாலை நிறத்தில் இருட்டிய பின் செடியிலிருந்து பூப்பறித்தால், வீட்டுக்கு கெட்டது நடக்கும் என சொல்வார்கள்.
உண்மை காரணம்- மாலை நிறத்தில் இருட்டிய பின், செடி கொடிகளில் பூச்சி, பாம்பு, தேள் போன்றவை இருக்கலாம். அதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்பதற்காக இருட்டில் பூப்பறிக்க கூடாது என சொல்லியிருப்பார்கள்.
4.) சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் ஏன் குளித்துவிட்டு பின்வாசல் வழியே வர வேண்டும் ?
சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் கண்டிப்பாக குளிக்க வேண்டும். இல்லாவிடில் அந்த தீட்டு நமக்கும் ஓட்டி கொள்ளும்.
உண்மை காரணம்- முன்பெல்லாம் ஒருவர் இயற்கையாகவோ/செயற்கையாகவோ இறந்திருந்ததால், உடலை வீட்டில் அப்படியே தரையில் துணி விரித்து போட்டு வைத்திருப்பார்கள். இறந்த உடலிலிருந்து நிறைய நுண்ணுயிர்கள்/கிருமிகள் வந்தவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளவரையும் பாதிக்கும். அதனால் தான் சாவு வீட்டுக்கு போய் வந்தால் குளித்துவிட்டு சுத்தமாக இருக்க வேண்டும். அது சரி.. அது ஏன் கொல்லைப்புறமாக வரவேண்டும் ? முன்பு, குளியலறை வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் தான் இருக்கும். அல்லது வெட்ட வெளியில் கொல்லையில் தான் குளிப்பார்கள். அதனால் பின் வாசல் வழியே குளித்துவிட்டு வீட்டுக்குள் போவார்கள்.
5.) பூனை குறுக்கே வந்தால் ஏன் கெட்ட சகுனம் ?
வெளியே போகும் போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம். போகிற காரிய தடைப்படும். மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து கிளம்ப வேண்டும்.
உண்மை காரணம்- அக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போக காட்டு பாதை வழியேதான் போக வேண்டும். காட்டுப்பூனை, சிறுத்தை, புலி போன்ற மிருங்கங்கள் போகும் வழியில் குறுக்கே கடந்து போகும். இப்பூனை வகையறாவை சேர்ந்த மிருகங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகும் போது ஒருமுறை நின்று பார்த்து விட்டு தான் கடக்கும். இரையை தேடி கொண்டே போகுமாம். அதனால் தூரத்தில் இப்பூனைகளை கண்டாலோ/ வழியில் வந்தாலோ/கடந்தாலோ திரும்பி போய் விடுவார்கள். அந்த காரணம் தான் இக்காலத்தில் மருவி இப்படி ஆகிவிட்டது.
6.) தும்மினால் கெட்ட சகுனம்-
நல்ல காரியம் செய்யும் போதோ/வெளியே செல்லும் போதோ தும்மல் வந்தால் அபசகுனம்.
உண்மை காரணம்- தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல். ஒருவர் தும்மினால், அவருக்கு உடம்பு சுகமில்லை என கருதி கசாயமோ அல்லது சீரக வெந்நீரோ தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும் போது தும்மினால், உடம்பு சுகமில்லை போகவேண்டாம் என்றும் சொல்லியும், ஒரு சொம்பு வெந்நீர் கொடுத்து அனுப்புவதையம் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதைதான் நாம் அபசகுனம் என்று மாற்றியுள்ளோம். (இப்படி தான் இருந்திருக்கும் என நானே யோசித்து எழுதியது).
7.) புரட்டாசி மாதம் ஏன் மாமிசம் சாப்பிட கூடாது ?
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விசேஷ மாதம். அதனால் பெருமாளுக்கு நோன்பு நோற்று விரதம் எடுத்து, மாமிசம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
உண்மை காரணம்- புரட்டாசி மாதத்தில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பருவ நிலை மாறும் காலம். இம்மாதத்தில் அசைவ உணவை சாப்பிட்டால், உடல் சூடேறி உபாதைகள் வர நேரிடும். அதனால் தான் மாமிச உணவை தவிர்த்து, ஒரு பொழுது உணவை (அளவாக) சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் என பின்பற்றினார்கள். இதில் பெருமாள் எப்படி வந்தார் என சத்தியமாய் எனக்கு தெரியாது!
8.) ஏன் இரவில் அரச மரத்தடியே படுக்கக் கூடாது ?
இரவு நேரத்தில் அரச மரத்தடியே படுத்து தூங்கினால், காத்து கருப்பு அடித்து விடும் என சொல்வார்கள்.
உண்மை காரணம்- அரசமரம் பகலில் கரியமில வாயுவை எழுத்து கொண்டு, பிராண வாயுவை விடும். ஆனால் இரவில் பிராண வாயுவை எழுத்து கொண்டு, கரியமில வாயுவை வெளியிடும். மரத்தடியில் இரவில் தூங்குபவர்கள் கரியமில வாயுவை சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்படும், உயிர் போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் இரவில் அரச மரத்தடியே படுக்க கூடாது என சொல்லி வைத்தார்கள்.
9.) மொய் வைக்கும் போது ஏன் ஒற்றைப் படையில் (101 ருபாய் , 501 ருபாய், 1001 ருபாய்) மொய் வைக்கிறார்கள்?
ஒற்றைப் படையில் மொய் வைப்பது தான் சம்பிரதாயம். அப்படி தான் வைக்க வேண்டும்.
உண்மை காரணம்- இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும். அப்படி வகுத்தால் மீதம் (remainder) பூஜியமோ அல்லது perfect number தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் decimal ஆக தான் வரும். இது போல கணவன் மனைவி பிரியாமல், யாராலும் பிரியப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. உதாரணம்: (100/2=50) , (101/2=50.5)
10.) உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்
வீட்டில் உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்.
உண்மை காரணம்- பழங்காலம் முதல் உப்பு மருத்துவம் மற்றும் சமையலில் மிக முக்கியமான பொருள் ஆகும். பண்ட மாற்று முறையிலும் உப்பு மிக முக்கியமானது. அதனால் அதை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டி சொல்லியிருப்பார்கள்.

Subscribe to:
Posts (Atom)