Wednesday, 6 September 2017

அஸ்வகந்தா.மூலிகை

                                                                                                                                                                                       இந்தியாவில் கிடைக்கும் மிக அரிய மூலிகையான இந்த அஸ்வகந்தா மூலிகையை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மூலிகையாகும். சமஸ்கிருதத்தில் அஸ்வம் என்றால் குதிரையை குறிக்கும். நாம் பொதுவாக வேகம் என்றால் குதிரையை தான் எடுத்துக்காட்டாக கூறுவோம்.
இந்த அஸ்வகந்தா மூலிகையானது நமக்கு ஒரு குதிரையின் ஆற்றலை தருகிறது. இது குறிப்பிட்ட சில உறுப்புகளுக்கு மட்டும் பயனை கொடுப்பதில்லை.
முழு உடலுக்கும் தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த அஸ்வகந்தா மூலிகையின் மகத்தான பயன்களை இந்த பகுதியில் காணலாம்.

1. மன அழுத்தம் அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. நீங்கள் மிக சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் இந்த மூலிகை பயனுள்ளதாக இருக்கும்.

2. நரம்பு மண்டலம் பல ஆராய்ச்சிகளில் அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளன. இது நியாபக சக்தியை அதிகரிப்பதாகவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தை போக்கவும் இது உதவுகிறது.

3. கேன்சரை தடுக்க அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் கேன்சரை எதிர்த்து செயல்படும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் திறன் இதற்கு உள்ளது.

4. நோய் எதிர்ப்பு சக்தி அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

5. ஆண்மை அதிகரிக்க! அஸ்வகந்தா மூலிகையில் அமுக்கிரா கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு. இதில் சீமை அமுக்கிரா ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகை வயாகரா எனவும் அழைக்கப்படுகிறது.

6. வேகம் அதிகரிக்கும் அஸ்வகந்தா மூளையின் வேகத்தை அதிகரிக்கும். மூளை அழற்சி போன்றவற்றை போக்கும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் சில பிரச்சனைகளை அஸ்வகந்தா சரி செய்யும். இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை பெருக்கி நீங்கள் உடலுறவில் வேகமாக செயல்பட உதவும்.

7. குணப்படுத்தும் பிற நோய்கள் அஸ்வகந்தா கசப்பு தன்மை உடையது தான் என்றாலும், இது கை, கால் நடுக்கம், வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, குடல் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை சரி செய்யும் திறன் கொண்டது.

8. எப்படி சாப்பிடலாம்? நாட்டு மருந்து கடைகளில் அஸ்வகந்தா பொடி மற்றும் லேகிய வடிவில் கிடைக்கிறது. இதனை நீங்கள் நாட்டு மருத்துவர் பரிந்துரை செய்யும் அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

ஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம் - இயற்கை மருத்துவம்

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு.

இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது.

உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் இது பயன்படுவதால், செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் தருகிறது பெருங்காயம். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும். பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும். பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும்.

ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன. பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.

#மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

#நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

#மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

#கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

#பற்கள் -மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

#நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

#ரத்தம் -வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

#சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

#நுரையீரல் - இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

#வயிறு காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

#கணையம்

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.
கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

 #கல்லீரல் - மண்ணீரல்

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

 #மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

#பாதம் கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்

பாதம், விரல் வலி சரியாகும்.

Tuesday, 5 September 2017

ஒலி அறிவியலும், மந்திரங்களும், எந்திரங்களும்..

பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம். கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும்போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும். அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மந்திரங்களின் மாற்றாக கருதப்படும். அதைப்பற்றி அடுத்த பதிவில்…
இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்? ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார். அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.
அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே. TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி !!!
விடை தேடுவோம். முடிந்தவரை எல்லாரும் இப்பதிவை பகிர்ந்து எல்லோருக்கும் நமது வழிபாட்டு முறைகளின் அறிவியலை உணர்த்தி பயன்பெறுவோம்.

மழையில் நனைந்தால் நோய்கள் பறந்துபோகும் | Wet in Rain to get well soon | ...





மழையில் நனைந்தால் நோய்கள் பறந்துபோகும் | Wet in Rain to get well soon | Organic Living https://youtu.be/OY4FiDyTSgE

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்துகாய்ச்சல் வந்தால்அவன் ஆரோக்கியமாக இல்லைஎனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.

சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறதுகாய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.
உடலில் பல நாட்களாகபல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும்சளியாகவும்மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானாஇல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால்மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.
எனவேமழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.
மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும்குப்பைகளும்வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும்.
முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள்குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.

இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழுபுச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.

நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்துநமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகிநமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவேமழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.

மழையில் நனைவது மிகவும் அற்புதமானஅருமையானசந்தோஷமான மனதிற்கு பிடித்தமானபெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டுஅதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.


எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்திநீர் பிராணன்நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாகஅமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.

Monday, 4 September 2017

Happy Teacher Day | ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | Organic Living






இயற்கைக்கு மாறுவோம் !!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

🍅 இன்று பலரும் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்கி இருப்பது மகிழ்ச்சியான ஒன்று தான். ஆனால் பலரும் ஆர்கானிக் பொருட்களை வாங்குவதில் தவறு செய்கின்றனர்.

🍆 இது பற்றிய எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

🍇 நான் ஒரு சு ப்பர் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருந்தேன்.

🍈 அங்கு காய்கறிகள் பகுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்ற பலகையின் கீழ் வெண்டை, கத்தரி மற்றும் சில கீரை வகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

🍉 அப்பொழுது ஒரு பெண்மணி இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை பார்த்து விட்டு ஆர்வமாக அருகில் வந்தார்.

🍊 ஆனால் காய்கறிகளை பார்த்தவுடன் முகம் சுளித்தார். ஏனெனில் காய்கறிகள் பளபளப்பாக இல்லை. மேலும் ஒரு சில இடங்களில் பு ச்சி தாக்குதலுக்கான அடையாளங்கள் காணப்பட்டன.

🍋 உடனே அந்த பெண்மணி, அங்கு இருந்த பணியாளர் ஒருவரை அழைத்து இப்படி காய்கறிகள் இருந்தால் எப்படி வாங்குவது? நல்ல காய்கறிகளை வையுங்கள், என்று கூறினார்.

🍍 அதற்கு அந்த பணியாளர் இது, இயற்கை முறையில் விளைந்தது என்று கூறினார். ஆனால் அந்த பெண்மணி சமாதானம் அடையவில்லை.

🍎 காய்கறிகளை வாங்காமல், இது போன்ற காய்கறிகளை நீங்கள் விற்பனை செய்தால் கடைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று போகிற போக்கில் போட்டு விட்டு சென்று விட்டார்.

🍐 காய்கறிகள் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள அருகில் சென்று காய்கறிகளை பார்த்தேன்.

🍑 அந்த பெண்ணின் ஏமாற்றம் எனக்கு தெரிந்தது, அதே சமயம் அவர்களின் அறியாமையும் கூட....

🍒 நாம் எல்லாம் பளபளப்பாக, பு ச்சி தாக்குதல் இல்லாத காய்கறிகளை வாங்கி பழகியவர்கள். அவர் இயற்கையாக விளைந்த பொருட்களை பார்த்தவுடன் அதுவும் பளபளப்பாக தான் இருக்கும் என்று நம்பி ஏமாந்து விட்டார்.

🍅 ஆனால் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளில் தான் பு ச்சிகளின் தாக்குதல் இருக்கும் என்று அவர் அறியவில்லை.

🍇 ஆர்கானிக் உணவுப் பொருட்களில் எப்படியும் ஒன்றிரண்டு பு ச்சிகளாவது இருக்க கூடும். சில சமயங்களில் அதுவே எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கலாம்.

🍈 அதை சுத்தம் செய்து பயன்படுத்தலாம். ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களை போலவே ஆர்கானிக் பொருட்களும், பார்க்க பளிச்சென, பு ச்சிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

இது எப்படி சாத்தியமாகும்?

🍊 வண்டுகளே உண்ணாத, புழுக்களே தாக்காத உணவு பொருட்களை நாம் சாப்பிட்டால் நாம் மனிதர்களா?

🍋 மேலும் விவசாயிகள் பு ச்சிமருந்துகளை பயன்படுத்துகிறார்கள், என்று அவர்களை குறை கூறும் நாம், இயற்கை முறையில் சற்றே புழு தாக்குதல் உடைய காய்கறிகளை வாங்க மறுப்பதை என்னவென்று கூறுவது?

🍍 அவர்கள் இயற்கை முறைக்கு மாறினாலும், அவர்களை மீண்டும் பு ச்சிக்கொல்லிகளை பயன்படுத்த தூண்டுவது நாம் தான்.....!!

🍎 மீண்டும் நான் உள்ளே சென்று பொருட்களை வாங்கி வருவதற்குள் அந்த பணியாளர் அங்கிருந்த இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்ற அட்டையை எடுத்து விட்டார்.

🍐 அது மட்டுமில்லாமல் அங்கு இருந்த காய்கறிகளின் இடம் காணாமல் போய்விட்டது. இனிமேல் அந்த கடையில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளுக்கு இடம் இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.

🍒 அந்த இடத்தில் ஒரு விவசாயின் உழைப்பு வீணானது. நம்மால் ஒருவரின் உழைப்பு வீணாகலாமா?

நல்ல தூக்கத்திற்கு தூங்கும் முன் செய்ய வேண்டியவை | Things to do before...





நல்ல தூக்கத்திற்கு  தூங்கும் முன்  செய்ய வேண்டியவை | Things to do before Sleep | Organic Living https://youtu.be/ae03pfRUo4Q

Sunday, 3 September 2017

செலவில்லாமல் உடல் கோளாறுகளை சரி செய்வது எப்படி | How to Cure Disease wit...





செலவில்லாமல் உடல் கோளாறுகளை சரி செய்வது எப்படி | How to Cure Disease without Money | Organic Living https://youtu.be/ZD0Da4te6CE

இதை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்க வளமுடன்.

✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)

✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!

இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.!
விழித்து கொள்ளுங்கள்.!

✖ சாக்லெட் வேண்டாம்.! (CHOCHALATES)

✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.!

✖pizza, burgers தவிர்க்கவும்.!
 (AVOID JUNK FOOD)

✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT)
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது!

✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.!

✖ corn flakes,oats வேண்டாம்.!

✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.!

✖சீனியே வேண்டாம்.! (SUGAR)

✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.

✔  black tea without sugar good

✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.

✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்.

✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.!
இது  Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.!!

✔ நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.!
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.!


Hyper activity because of this types of food also


✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.!
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்...!!

✔ நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....!

✔ ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விசயம் அவனை மட்டுமே மாற்றும்....!

✔ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம் குடும்பத்தையே மாற்றும்....!

✔எனவே, தயவுசெய்து இதை உங்கள் குடும்ப பெண் களுக்கு புரிய வையுங்கள்...!

மாற்றம் நிச்சயம்....!!
 இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

பகிர்ந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவர்களும்  அறிந்துகொள்ளட்டும்..உங்கள் ஆ மற்றும் போக்குவரத்து

நவபாசானமும் மருத்துவ ரகசியமும் | Secret of Navabasanam| Bogar Saint | O...





நவபாசானமும் மிக பெரிய  மருத்துவ ரகசியமும் |  Secret of Navabasanam| Bogar Saint | Organic Living https://youtu.be/5PEUN0SjkJ4

Saturday, 2 September 2017

What is Bitcoin | How to Mine Bitcoin | Full details about Bitcoin | Ima...





What is Bitcoin | How to Mine Bitcoin | Full details about Bitcoin | Imaiyam https://youtu.be/VHFadBqWJJI

Buy Bitcoin in "UNOCOIN" Use this link
https://www.unocoin.com/?referrerid=202671

For Purchasing Bitcoin Click the link and Download the App
http://link.zebpay.com/ref/REF33447601

Bitcoin is the future for Earning Money
Get bitcoins worth ₹100 free on your first bitcoin buy or sell with referral code 'REF33447601'.

For ZEBPAY APP:
http://link.zebpay.com/ref/REF33447601


Official Website   : https://goo.gl/cYOmYx
Facebook Page   : https://goo.gl/8B9h4K
Twitter Page        : https://goo.gl/ghPqqK
Facebook Group : https://goo.gl/iarJFH
 Channel : https://goo.gl/Gy4kna
For Amazon  : http://amzn.to/2lvdXox
For Flipkart  :  http://fkrt.it/RYa0o!NNNN

நம் உடல் உள் உறுப்புகளின் நேரம்

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴 விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴 விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.

இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴 காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴 முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴 பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.

இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴 பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.

நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴 மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.

பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴 இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.

பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴 இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

🔴 இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.

 இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴 இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

🔴 மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர். I