Saturday, 2 September 2017

இன்சுலின் அளவைச் சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்

இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.

பொதுவாக இது எளிதான காரியம் அல்ல. இது மிகவும் கடினமானது. ஆனால் சரியான வாழ்க்கை முறை, உணவுகள் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். அதிலும் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு கவனமாக இல்லாவிட்டால், நீரிழிவு நோயானது முற்றிவிடும்.

சரி, இப்போது அந்த இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில செயல்களைப் பார்ப்போம்.

சரியான எடை

உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். எனவே உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

சுறுசுறுப்பான நடை

போதிய உடற்பயிற்சியானது இல்லாவிட்டாலும், இன்சுலின் குறைபாடு ஏற்படும். எனவே, தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான நடையை மேற்கொண்டால், இன்சுலினானது சரியாக சுரக்கப்பட்டு, உடல் முழுவதும் சீராக செல்லும்.

பூசணிக்காய்

பூசணிக்காய் இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. மேலும் பூசணிக்காயில் உள்ள ஒருசில நொதிகள் இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளும்

ஸ்டார்ச் உணவுகளை தவிர்க்கவும்

ஏற்கனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள், ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாதத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த தினை, கம்பு போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்பு நிறைந்த ஈரல்

தற்போதுள்ள இளம் தலைமுறையினர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கொழுப்பு நிறைந்த கல்லீரல் பிரச்சனை. இந்த பிரச்சனையில் கொழுப்புக்களானது கல்லீரலில் அதிகம் தங்கி, கிளைகோஜன் பயன்படுத்தப்படாமல் அதிகப்படியாக சேகரிக்கப்பட்டிருக்கும். இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. எனவே கல்லீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் குறையும். எனவே ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளை அதிகம் சேர்ப்பது நல்லது.

குறைந்த கிளைசீமிக் உள்ள உணவுகள்

உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவு மட்டும் குறைவாக இருந்தால் போதாது. அதில் உள்ள கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும்.

பட்டை

பட்டையை உணவில் அதிகம் சேர்த்தால், இன்சுலின் குறைபாட்டை போக்கி, நீரிழிவு நோயை தடுக்கலாம். அதற்கு தினமும் காலையில் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறிது பட்டையை பொடி செய்து போட்டு குடிப்பது மிகவும் நல்லது.

குரோமியம் குறைபாடு

உடலில் குரோமியம் என்னும் கனிமச்சத்து குறைவாக இருந்தாலும், இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே குரோமியம் அதிகம் உள்ள உணவான கடல் சிப்பியை அதிகம் உட்கொள்வது சிறந்தது.

வைட்டமின் கே உணவுகள்

எளிதில் கரையக்கூடிய கொழுப்பு தான் வைட்டமின் கே. இந்த வைட்டமின் கே உள்ள உணவுப் பொருட்களையோ அல்லது மருந்துகளையோ சாப்பிட்டால், இன்சுலின் குறைபாட்டை தவிர்க்கலாம். அதிலும், பச்சை இலை காய்கறிகளான பசலைக்கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றில் வைட்டமின் கே அதிகம் உள்ளது.
வெண்டைக்காய்

இரவில் படுக்கும் போது வெண்டைக்காயை நீரில் நறுக்கி போட்டு, காலையில் எழுந்து அந்த நீரைப் பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதோடு, இன்சுலின் குறைபாடும் நீங்கும்.

ஊமத்தை

1) வேறுபெயர்கள் -:
ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும். இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.

2) தாவரப்பெயர் -:
DATURA METEL.

3) தாவரக்குடும்பம் -:
SOLANACEAE.

4) வகைகள் -:
வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை, கருஊமத்தை எனும் வகைப்படும்.

5) வளரும் தன்மை -:
எல்லா வகை நிலங்களும் ஏற்றது. வளர்ச்சுயைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்ற இலைகளையும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மவர்களையும் முள்நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடிகள்.

ஊமத்தை காரத்தன்மையும்,கைப்புச் சுவையும் கொண்ட தாவரம்; வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக்குறைக்கும்.

ஊமத்தை தூக்கத்தைத் தூண்டும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும்;நரம்புகளைப் பலப்படுத்தும். வெளிப் பூச்சுத் தைலங்களில் இது சேர்க்கப்படுகின்றது.

ஊமத்தை 1மீட்டர் வரை உயரமாக வளரும்செடி வகையைச் சார்ந்த‌து. அகன்ற பசுமையான இலைகள், நீள்வட்ட வடிவில் காணப்படும். வாயகன்று, நீண்ட குழலுள்ள புனல்போன்ற அமைப்பில் வெள்ளை நிறமான மலர்கள் காணப்படும்.

ஊமத்தை காய் உருண்டையாகவும் பசுமையான முட்கள் அடர்ந்ததாகவும் இருக்கும். இலை, பூ, காய் விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

ஊமத்தை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு.

மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் ஊமத்தை நீலநிறமான இதழ்களுடன் காணப்படுவதுண்டு (நீல ஊமத்தை/கரு ஊமத்தை).அரிதாக அடுக்கு இதழ்களால் ஆன மலர்களும் உண்டு (அடுக்கு ஊமத்தை).மருத்துவப் பயன் பொதுவாக அனைத்திற்கும் ஒன்றே ஆகும்.

பழங்கால இந்திய மருத்துவம் மற்றும் இலக்கிய நூல்களில் ஊமத்தை சிவசேகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது; ஊமத்தை பூ சிவபெருமான் வழிபாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது

மலர்கள் வெள்ளை, மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இவை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.  நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும்.

6) பயன்தரும் பாகங்கள் -:
செடியின் எல்லா பாகங்களும் மருத்துவ பயனுடையவை.

7) பயன்கள் -:
பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும்.  அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச ்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.  மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.  கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

இலைச் சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில்மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.

இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.

ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். நஞ்சுத்தன்மையுடையது. இதன் நஞ்சு முறிய தாமரைக ்கிழங்கை அரைத்து பாலில் இரு வேளை மூன்று நாள் கொடுக்கலாம்.  இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.

சித்தம் பிரமை -:
ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில ்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.

அனைத்து வகைப் புண்ணுக்கும். -

 ஊமத்தம்இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும். மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.

பேய்குணம் - :
இதன் காய், விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.

'பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்படாமல் செய்ய வேண்டியது.

பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும். இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...

"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".

அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் வந்துவிட வாய்ப்புண்டு.

கருஊமத்தை..... மற்ற ஊமத்தை போன்று அல்லாது இதன் பூ அடுக்கு அடுக்காக இருக்கும் இது மிகவும் சக்தி வாய்ந்தது இதில் ரசமணி கட்டினால் அளவிட முடியாத சக்தியை வாரிவழங்கும்  என நம்பப்படுகிறது.

ஊமத்தை கெட்ட மணத்தையும், உட்கொண்டால் மயக்கத்தையும்,வெறியையும் கொடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. சாராயம் போன்ற போதைப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது.

இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாச காச நோய் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம். தலைச்சுற்றல், வாய்க் குமட்டல் போன்றவை ஏற்பட்டால் உடனே மேற்கூறியவாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

புண்கள், அழுகிய புண்கள் குணமாக  ½ லிட்டர் தேங்காய் எண்ணெயில் ½ லிட்டர் ஊமத்தை இலைச் சாற்றைக் கலந்து அடுப்பில் நீர் வற்றும் வரை காய்ச்சி, குளிர்ந்த பின்னர், சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் வெளிப்பூச்சாக பயன்படுத்தி வரவேண்டும்.

ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட‌  கீல்வாயு குணமாகும்.

தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.

வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட வேண்டும்.

பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும். இது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும்.

கரு ஊமத்தை  மலைப் பகுதிகளிலுள்ள புறம் போக்கு நிலங்கள், பாழ் நிலங்களில் அரிதாகப் காணப்படுவதாகும். மிக அரிதாகச் சமவெளிப் பகுதியிலும் வளர்கின்றது.

கரு ஊமத்தை பூக்கள் ஊதா நிறமானவை. பழங்கள் நீலம் படர்ந்தவை. குறு முட்களுடன் கூடியவை. இது இதன் மருத்துவக் குணங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது

நாய் கடிகளில் (அலர்க்க விஷம் ) – ஊமத்தை , வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும்.

கிருமி – ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன், ஈறு தொல்லை நீங்கும்.

பிடக ஆமாய –

வேனல் கட்டிகளில் – வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு, கட்டிகளை கரைக்க வெளிப் பிரயோகமாக உதவும்.

மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் – கனகாசவம், சூத சேகர ரசம், மகா விஷ கர்ப்ப தைலம், உன்மத்த ரசம்.

ஆஸ்மா குணமாக -கனகாசவம் உதவும்.

அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்- தற்கொலைக்கு விஷம் சாபிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றியுள்ளது எனவே -ஆயுர்வேத சித்த மருந்தில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது.

அட்ரோபின் கண்ணின் விழிபார்வையை விரிக்க உதவும். இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது

பொன்னூமத்தை மூலிகை மருத்துவம் – ரசவாதமும் -மிருக வசியம்.

சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளிலும், வனங்களிலும் குடில் அமைத்தும், குகைகளிலும் தவம் இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர்பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.

அவைகளில் ஒன்றுதான் “பொன் ஊமத்தை” என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்…

காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே

தங்கமா மூலியது தழைதானாகும்
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும்
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும்
புகழான காயாதி இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே

காண்பானே தழையினது மகிமையாலே
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம்
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று
வீண்பாக முறையாம லடிவணங்கி
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே

இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும். இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம். இம்மூலிகையை இடித்து பிழிந்து சாறெடுத்து ரவி என்ற வெயிலில் காயவிடவும். பின்பு தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.

இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுச்சாறு ஊற்ற வேண்டும். இதுபோல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும்

பழங்களின் பயன்கள்

1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

3. முந்திரிப் பழம் - கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

4. கண்டங் கத்திரிப்பழம் - கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

5. தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

06. பலாப்பழம் - பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

07. இலந்தைப் பழம் - பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

08. திராட்சை - உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

09. பப்பாளிப் பழம் - யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

10. வாழைப்பழம் - மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

11. வில்வப் பழம் - பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

12. அரசம் பழம் - விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

13. சீமை அத்திப்பழம் - மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

14. பேரீச்சம் பழம் - இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

15. தர்பூசணிப் பழம் - கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

16. முலாம் பழம் - மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

17. விளாம்பழம் - பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

18. அன்னாசிப் பழம் - குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

19. தக்காளி - இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

20. எலுமிச்சம்பழம் - எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

21. கமலா - இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

22. கொய்யாப் பழம் - கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

23. களாப் பழம் - களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

24. நறுவிலிப் பழம் - நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

25. ஆல்பகோடாப் பழம் - காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

சளி என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா?

சளி என்றதுமே “ச்சீ” என்று முகம் சுழிப்போம், ஆனால் அதன் உண்மையான பலன்கள் உங்களுக்கு தெரியுமா?
நம் உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளே அதை போலத்தான் சளியும்.
நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது நமது உடல் சளியை உற்பத்திக் கொண்டே தான் இருக்கும்.

சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நம் வாய் , மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்து அவை அனைத்தையும் பாதுகாப்பு கவசம் போல பாதுகாக்கின்றன.

சளியில் பாக்டீரியா வைரஸ்களை , நம் உடம்பு கண்டு கொள்வதற்காக Antibodies, நொதிகள் (enzymes ), புரதங்கள் (Protein ) , பல்வேறு உயிரணுக்கள் (Cells ) நிறைந்து இருக்கின்றன.
இயற்கையாக விளைந்த பொருட்கள் ஜீரணம் செய்யும் சக்தி நமது உடலுக்கு உண்டு.
ஆனால் ரசாயன பொருட்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, உடல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் வேளையில் சளியாக உருமாறுகிறது.
அதாவது உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாகும்.
ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே வைக்கின்றோம்.
இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது.
இதை நம் உடலில் இருந்து வெளியேற்றவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உள்ளுறுப்புகள் முயற்சி செய்கின்றன.
இதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது நாம் உட்கொள்ளும் உணவுகள் தான்.
இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு முறைகளில் சளி ஏற்படுகிறது, உடல் சூடானாலும், உடல் குளிர்ச்சியாக இருந்தாலும் சளி உருவாகும்.

*உடல் சூட்டால் உருவாகும் சளி*

உடல் சூடாக இருப்பதனால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும், வறட்டு இருமல் இருக்கும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகவே வெளியேற்ற வேண்டும்.
அப்போது தூதுவளை எடுத்துக் கொண்டால் உடல் சூடு அதிகமாகி வறட்டு இருமல் அதிகமாகுமே தவிர சளி குறையாது.

அந்த மாதிரியான நேரங்களில் நாட்டு மாதுளம் பழச்சாறு(மெல்லிய மஞ்சள் நிறத்தோலுடன் சேர்த்து) காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணியளவில் சாப்பிட வேண்டும்.
இதனுடன் நாட்டு சர்க்கரை, வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

*உடல் குளிர்ச்சியாக இருப்பதால் உருவாகும் சளி*

பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும்.
இதனால் உருவாகும் சளியை வெளியேற்ற வேண்டுமே தவிர எந்த வித ரசாயன மருந்துகளோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இதற்கு இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் சளி வெளியேறிவிடும்.

சளி பிடித்து விட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுமே தவிர, இராசயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்ககூடாது!!!

பெண்களின் உடல் நலனைக் காக்கும் கசகசா -

பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் மருந்துகளிலும் உணவுகளிலும் கசகசாவை பயன்படுத்தி வருகிறோம். பாப்பி என்னும் செடியில் விதைகளை தாங்கி நிற்கும் விதைப்பை முற்றி, காய்ந்த பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் விதை தான் கசகசா எனப்படுகிறது.

கசகசாவில் 50 சதவீதம் எண்ணெய்த்தன்மை இருக்கிறது. இந்த எண்ணெயில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு நன்மை செய்வதாகும். கசகசாவை அரைத்து நாம் உணவில் சேர்க்கிறோம்.

அதனால் உணவுக்கு சுவையும், மணமும் கிடைக்கிறது. கூடவே அதில் இருக்கும் மருத்துவ சக்தி உடல் உறுப்புகள் நன்றாக இயங்கச்செய்கிறது. இதில் மருந்துவ சக்தி உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்கிறது. இதில் வைட்டமின் - பி, மக்னீசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது உடல் இயக்கத்திற்ககு் உதவுகிறது.

கசகசா உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. கோடை காலத்தில் உண்டாகும் வாய்புண்களை நீக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. வயிற்று புண்களையும் குணப்படுத்தும்.

சூட்டினால் வயிற்றுபோக்கு பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கசகசாவை ஊறவைத்து அரைக்க வேண்டும். அதில் பசும்பால் அல்லது தேங்காய் பால் கலந்து பருக வேண்டும். மாதவிடாய் முடிவுக்கு வரும் மேனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு உடல் வறண்டுபோகும். கண்களை சுற்றி கருவளையமும் சுருக்கமும் உண்டாகும். உடல் பலமும் குறையும். அப்போது கசகசா மற்றும் பாதாம்பருப்பை அரைத்து பாலில் கலந்து பருகலாம்.

பூப்பெய்திய தொடக்க காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் வயிற்றுவலி தோன்றும். மேற்கண்ட முறையில் கசகசாவை அரைத்து மாதவிடாய் வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே சாப்பிட்டுவந்தால் வயிற்றுவலி குறையும். உடலும், வனப்பு பெறும். பிரசவித்த பெண்களும் இதனை சாப்பிடலாம்.

கசகசா சக்தியை அதிகரிக்கும். நரம்பு இயக்கங்களை சீர்படுத்தி இரவில் ஆழ்ந்த தூக்கத்தையும் தரும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கச்செய்யும். நரம்பு செல்களில் உற்பத்திக்கும் உதவும். சருமத்தில் தேமல், கரும்புள்ளிகள் இருந்தால் கசகசாவை தேங்காய்பாலில் அரைத்து அதில் பூசவேண்டும். கசகசா பிஸ்கெட், சாக்லெட், கேக் போன்றவைகளிலும் சேர்க்கப்படுகிறது. கசகசா லேகியம் பல்வேறு நோய்களுக்கு நிவாரணமாக அமைகிறது.

கடைகளில் சூப் சாப்பிடாதீங்க


பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் சைனி சந்திரன்: "சூப்' பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான், சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.ஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது. ஆரோக்கியத்தை மேம்
படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.தினமும் சூப் பருகலாம் தவறில்லை.

ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்!சரி, வீட்டில் தானே தயாரிக்க வேண்டும் என்று, பலர், ரெடிமேடாகக் கிடைக்கும் சூப் பவுடர்களைக் கொண்டு, வீட்டிலேயே சூப் தயாரிக்கின்றனர். அவசர வாழ்க்கையில், வீட்டிலேயே சூப் தயாரிக்க நேரம் இருக்காது என்பதால், இதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சூப் பவுடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சூப் பவுடர்களில், சுவை கூட்டும் கெமிக்கல் கலக்கக் கூடாது என, "ரூல்ஸ்' இருக்கிறது.

ஆகவே, அதற்கு பதிலாக, சில பிராண்டுகளில், "மோனோ சோடியம் குளுடோமிட்' கலந்திருக்கலாம். எனவே, சூப் பவுடர் பாக்கெட் வாங்கும் போது, அதில், மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்.சுவையாக இருக்கிறது என்று எல்லா சூப் வகைகளையும் ஒரு வெட்டு வெட்டக்கூடாது. சுகர் பேஷண்டுகள், தக்காளி சூப் தவிர்க்க வேண்டியிருக்கலாம்.

சில சூப் வகைகள், உடல் உஷ்ணத்தைத் தூண்டுவதாக இருக்கும். இது மாதிரி அவரவர் உடல் நிலைக்கேற்ப, சூப் வகைகள் மாறுபடும்.சூப் வகைகளை, காலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதியச் சாப்பாடு, மாலை டிபன், அதேபோல், இரவு சாப்பிடப் போவதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னதாக சூப் சாப்பிடுவது, "பெஸ்ட்!'"கடைகளில் சூப் சாப்பிடாதீங்க!'

பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் சைனி சந்திரன்: "சூப்' பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான், சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.ஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது. ஆரோக்கியத்தை மேம்
படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.தினமும் சூப் பருகலாம் தவறில்லை.

ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்!சரி, வீட்டில் தானே தயாரிக்க வேண்டும் என்று, பலர், ரெடிமேடாகக் கிடைக்கும் சூப் பவுடர்களைக் கொண்டு, வீட்டிலேயே சூப் தயாரிக்கின்றனர். அவசர வாழ்க்கையில், வீட்டிலேயே சூப் தயாரிக்க நேரம் இருக்காது என்பதால், இதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சூப் பவுடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சூப் பவுடர்களில், சுவை கூட்டும் கெமிக்கல் கலக்கக் கூடாது என, "ரூல்ஸ்' இருக்கிறது.

ஆகவே, அதற்குப் பதிலாக, சில பிராண்டுகளில், "மோனோ சோடியம் குளுடோமிட்' கலந்திருக்கலாம். எனவே, சூப் பவுடர் பாக்கெட் வாங்கும் போது, அதில், மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்.சுவையாக இருக்கிறது என்று எல்லா சூப் வகைகளையும் ஒரு வெட்டு வெட்டக்கூடாது. சுகர் பேஷண்டுகள், தக்காளி சூப் தவிர்க்க வேண்டியிருக்கலாம்.

சில சூப் வகைகள், உடல் உஷ்ணத்தைத் தூண்டுவதாக இருக்கும். இது மாதிரி அவரவர் உடல் நிலைக்கேற்ப, சூப் வகைகள் மாறுபடும்.சூப் வகைகளை, காலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதியச் சாப்பாடு, மாலை டிபன், அதேபோல், இரவு சாப்பிடப் போவதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னதாக சூப் சாப்பிடுவது, "பெஸ்ட்!'

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்


(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).

(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.

(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)

(5) உணவும் மருந்தும் ஒன்றே.

(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.

(7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.

(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.

(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே

(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.

(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி

(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி

(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)
5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)

(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.

(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.

(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.

கிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள் - இயற்கை மருத்துவம்

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

*  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது

அத்திப் பழத்தில் பொதிந்து கிடக்கும் மருத்து குணங்கள் ஒரு அலசல்…

அத்தி மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.
உலற வைத்துப் பொடித்த இலைகள் பித்தம், பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது.
காயங்களில் வடியும் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும்.
அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது.
இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும்.
மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப் போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.
அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது" - அத்திப் பழத்தில் பொதிந்த

நாட்டுக் கம்பு

நம் முன்னோர்கள், தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து, சத்தற்ற உணவுகளை, சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால், நோய்களின் வாழ்விடமாக, நம் உடல் மாறிவிட்டது.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில், வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாக காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.
மனச் சோர்வு இருந்தால், உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைபவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற, கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து, மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள், கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால், உடல் வலுவடையும்.
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும்; இதயத்தை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்; இரத்தத்தை சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்; நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்; தாதுவை விருத்தி செய்யும்; இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.
#நாட்டுக்கம்பு #தோசை:
நாலுபங்கு நாட்டுக்கம்பிற்கு ஒருபங்கு உளுந்தம்பருப்பு கலந்து கொஞ்சம் வெந்தயம் சேர்த்து முதல் நாள் இரவில் நீரில் ஊரவைத்து காலையில் க்ரைண்டரில் அரைத்தெடுத்து சிறிது உப்புச் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். மாலை லேசாக புளித்து தோசைசுட ஏற்ற பக்குவம் வந்துவிடும். கம்பு தோசைக்கு நல்லெண்ணை பயன்படுத்தினால் ஆரோக்கியம் இன்னும் கூடும். தொட்டுக்கொள்ள தங்கள் விருப்பமுள்ள சட்னியோ குழம்போ பயன்படுத்தவும்..

இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும் இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து. மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.


1 அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.



2 ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.


3 ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.


4தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.


5 நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.


6 நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்.


7 முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.


8வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.


9அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.


10 வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.


11 நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.


11நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.


13 சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.


14 மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.


15திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.

கிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள் - இயற்கை மருத்துவம்

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

*  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது