Saturday, 2 September 2017

இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்


(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).

(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.

(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)

(5) உணவும் மருந்தும் ஒன்றே.

(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.

(7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.

(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.

(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே

(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.

(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி

(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி

(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)
5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)

(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.

(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.

(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.

கிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள் - இயற்கை மருத்துவம்

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

*  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது

அத்திப் பழத்தில் பொதிந்து கிடக்கும் மருத்து குணங்கள் ஒரு அலசல்…

அத்தி மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.
உலற வைத்துப் பொடித்த இலைகள் பித்தம், பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது.
காயங்களில் வடியும் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும்.
அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது.
இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும்.
மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப் போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.
அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது" - அத்திப் பழத்தில் பொதிந்த

நாட்டுக் கம்பு

நம் முன்னோர்கள், தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து, சத்தற்ற உணவுகளை, சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால், நோய்களின் வாழ்விடமாக, நம் உடல் மாறிவிட்டது.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில், வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாக காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.
மனச் சோர்வு இருந்தால், உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைபவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற, கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து, மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள், கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால், உடல் வலுவடையும்.
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும்; இதயத்தை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்; இரத்தத்தை சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்; நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்; தாதுவை விருத்தி செய்யும்; இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.
#நாட்டுக்கம்பு #தோசை:
நாலுபங்கு நாட்டுக்கம்பிற்கு ஒருபங்கு உளுந்தம்பருப்பு கலந்து கொஞ்சம் வெந்தயம் சேர்த்து முதல் நாள் இரவில் நீரில் ஊரவைத்து காலையில் க்ரைண்டரில் அரைத்தெடுத்து சிறிது உப்புச் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். மாலை லேசாக புளித்து தோசைசுட ஏற்ற பக்குவம் வந்துவிடும். கம்பு தோசைக்கு நல்லெண்ணை பயன்படுத்தினால் ஆரோக்கியம் இன்னும் கூடும். தொட்டுக்கொள்ள தங்கள் விருப்பமுள்ள சட்னியோ குழம்போ பயன்படுத்தவும்..

இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும் இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து. மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.


1 அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.



2 ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.


3 ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.


4தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.


5 நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.


6 நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்.


7 முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.


8வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.


9அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.


10 வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.


11 நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.


11நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.


13 சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.


14 மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.


15திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.

கிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள் - இயற்கை மருத்துவம்

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

*  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது

இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு இரண்டு பத்து ரூவா..

சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூவா..

வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூவா..
வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூவா..

கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி, சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூவா..

நினைத்த போதெல்லாம் பறித்து தின்கி்ற சப்போட்டா கிலோ எண்பது ரூவா..
கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா..

ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா..
திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூவா..

இனி கூடிய விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கிடாரங்காய், வேம்புகுச்சி ,கருவேலங்குச்சி, மருதாணி, வேப்பிலை, மாவிலை, நொச்சி,வில்வம் ஆடாதொடா,  பவளமல்லி, பப்பாளி இலை, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு..

அதோட வேப்பம்பூ, மாம்பூ, மாதுளை பூ, செம்பருத்திப்
பூ,மகிழம்பூ நந்தியாவட்டை பூ, மாதிரி மறந்துபோனவை பலவும் இனி வரும்.

இதெல்லாம் விளைய வைக்க முடியாத அதிசய பொருளா என்ன..?
இவ்ளோ விலை விக்குதே..?

நம்ம வீட்டிலேயே கருவேப்பிலை முருங்கை மனத்தக்காளி பப்பாளி இதையெல்லாம் வளர்த்தா நம்ம பிள்ளைங்களாவது சாப்பிட கிடைக்குமல்லவா..
வரும் தலைமுறைக்கு சொத்து மட்டும் சேர்த்தா போதாது நண்பர்களே..
உழவே தலை சிறந்த கல்வி

அன்புடன் #ஆரோக்கியம்

பூப்பெய்தும் வயதில் பெண் குழந்தைகளுக்கு இந்த உணவெல்லாம் அவசியம்!

பெண்குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளில் முதலிடத்தில் இருப்பது பூப்பெய்தல் தான். பெண் குழந்தைகளின் ஹார்மோன் வளர்ச்சியை பூப்பெய்துதலை வைத்து தான் கணக்கிடப்படுகிறது.
குழந்தை பருவத்தை விட பூப்பெய்தலின் போது அதற்குப்பிறகு உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகரிக்கும், குழந்தை பருவத்தை விட இந்த பருவம் மிகவும் முக்கியமானது அந்த நேரத்தில் துரித உணவுகளையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை உடலில் சந்திக்காத மாற்றத்தை உதிரப் போக்கை முதன் முதலாக பெண் குழந்தைகள் சந்திக்கும் போது உடல் ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அதனால் அந்நேரத்தில் அவர்களுக்கு தேவையான நியூட்டிரிசியன்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பது அவசியம்.

பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. மாதவிடாய் ஆரம்பித்தால் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அல்லது அனீமியா ஏற்படும். அவர்களது உணவில் எப்போதும் இரும்புச் சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பீன்ஸ்,கீரை,முட்டை ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம்.

பருவ வயதில் இருக்கும் குழந்தைகள் ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், உறுப்புகள் திசுக்கள் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிடும். முட்டை,மீன்,பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் ப்ரோட்டீன் அதிகமாக கிடைக்கும்.

உடலில் கால்சியம் சத்து குறைந்தால் அது எலும்பு மற்றும் பற்களை பாதித்து விடும்.
வளரும் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 1200 மில்லி கிராம் வரை கால்சியம் அவசியம். லோ ஃபேட் டயட் மூலமாக கால்சியம் பெறலாம். அதிகமாக கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பருவத்திற்கு வரும் இளம் பெண்களுக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் அவசியமாது. பழங்கள் மற்றும் கீரைகளில் இது அதிகம் காணப்படும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களது டி.என்.ஏவை சரி செய்ய உதவி புரியும். கறி,பருப்பு வகைகளில் ஜிங்க் அதிகப்படியாக இருக்கும். ஒரு நாளில் ஒன்பது மில்லி கிராம் வரை ஜிங்க் அவசியமாகும்.

என்ன தான் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே உடலுக்கு நல்லதுபயக்கும். குறிப்பிட்ட அளவு தான் குடிக்க வேண்டும் என்றில்லாமல் தொடர்ந்து அடிக்கடி குடிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

வாழைப்பூவை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

வாழைமரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பலன் தரக்கூடியது. வாழைப்பூவை நாம் சமையலில் சேர்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது. கிராமப்பகுதிகளில் பல வீடுகளில் கட்டாயம் வாழைமரம் காணப்படும். வாழைப்பூ மிகவும் அரிதாக கிடைக்க கூடிய ஒரு பொருள் எல்லாம் இல்லை. ஆனாலும் இதனை நாம் ஏனோ அதிகம் பயன்படுத்துவதில்லை. வாழைப்பூவின் பயன்கள் பற்றி தெரிந்த பின்னர் கட்டாயம் நீங்கள் வாழைப்பூவை சமையலில் பயன்படுத்துவீர்கள்.

வாழைப்பூவை இரண்டு வாரங்கள் உட்கொண்டால் இரத்தில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இரத்தசோகை வராது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மன அழுத்தத்தால் வரக்கூடிய வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை ஆற தொடர்ந்து ஐந்து மாதங்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.

மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு இந்த வாழைப்பூ மருந்தாக பயன்படுகிறது.

வாய் துர்நாற்றம் மிகுந்த அவமானத்தை தரக்கூடியது. வாய்துர்நாற்றம் நீங்கவும், வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.

பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.

வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது.

வாழைப்பூவில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

வேக வைத்த வாழைப்பூ பொரியல், நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைப்போகிளைசீமிக் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் கருங்காலி வேர்!

மரங்கள் மனிதனுக்கு ஆதாரமானவையாகத் திகழ்கின்றன. மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர்.

ஆனால் இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.

பொதுவாக கருங்காலி மரம் இந்தியா முழுவதிலும், மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது.

நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் குருதிக்குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும்.

கருங்காலி வேர்:

* கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

* நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

* இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும்.

* வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருங்காலி மரப்பட்டை:

* கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.

* பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை அருந்துவது நல்லது.

* வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.

* இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கருங்காலி மரப்பிசின்:

* கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

* கரப்பான் நோயினை போக்கவல்லது. பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

* கருங்காலிக் கட்டையை தண்¬ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

"வெரிகோஸ் வெயின்" (varicose veins) " பிரச்னைக்கு தீர்வு...

நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மீன் வாங்கப்போறீங்களா?

ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட...

மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்...

மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக்கூடுதலாக 18முதல் 25கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்புடைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர்.

நெத்திலி, வாவல்(வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்களின் மருத்துவப்பண்புகள் சில...

1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.

2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.

9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.

இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது.

சரி... இப்படிப்பட்ட மீனை வாங்கும்போது அது நல்ல மீனா?... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது?...

மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது.

ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்...

இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்...

அவை என்னென்ன?...

மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்...

தரமான மீன்கள் என்றால்...

1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும்.
2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும்.
3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.
4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.
5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.
6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.
7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.

தரம் குறைந்த மீன்கள் என்றால்..

1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.
2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.
3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.
4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.
6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.
7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.

என்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா?...

அப்புறமென்ன?... இனி முடிந்தவரையிலும் இறைச்சிக்கடைகளின் பக்கம் திரும்பாமல் உங்களது பார்வையை மீன் மார்க்கெட் பக்கம் திருப்பி ஆரோக்கியமான உணவை உண்ணத்தொடங்குங்கள்... மற்றபடி என்ன மீன் வாங்கலாம் என்றெல்லாம் குழம்பாமல் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமிருப்பதால் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி கம கமவென சமைத்து சாப்பிடுங்கள்.

தம்மாத்துண்டு கேழ்வரகில் இத்தனை விஷயம் இருக்குதா?

Cute Health
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம். பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது மற்றும் இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர்.

ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களிலேயே சத்து அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும். பரவலாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பொதுவாக தென் இந்தியாவின் அனைத்து பகுதியினர் அடுப்பங்கரையிலும் இருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும்.

இந்தியா முழுவதும் பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இது தான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது.

இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. ஆகவே க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ் வரகு மிகவும் சத்தான தானி யங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும். அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது. இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

எடை இழக்க :

கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது. இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.

ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :

கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.

நீரிழிவு நோயைக் குணப்படுத்த :

கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

ரத்தத்தில் கொழுப்பை குறைக்க :

கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

ரத்த சோகையைக் குணப்படுத்த :

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

சோர்வைப் போக்க :

கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

புரதச்சத்து/அமினோ அமிலங்கள் :

உடலின் இயல்பான செயல் பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.

பிற ஆரோக்கிய நிலைமைகள் :

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த :

கேழ்வரகை வறுத்து உண வோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.

இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது. ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கிறான். அதனை கவுரமாகவும் எடுத்துக்கொள்ளும் கட்டாயத்திலும் இன்றைய மனித வாழ்க்கை முறை மாறி வருகிறது.

அதனால் ஏற்படும் மாற்றம் நோய் :

எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்திக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.