Saturday, 2 September 2017

பூப்பெய்தும் வயதில் பெண் குழந்தைகளுக்கு இந்த உணவெல்லாம் அவசியம்!



பெண்குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளில் முதலிடத்தில் இருப்பது பூப்பெய்தல் தான். பெண் குழந்தைகளின் ஹார்மோன் வளர்ச்சியை பூப்பெய்துதலை வைத்து தான் கணக்கிடப்படுகிறது.
குழந்தை பருவத்தை விட பூப்பெய்தலின் போது அதற்குப்பிறகு உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகரிக்கும், குழந்தை பருவத்தை விட இந்த பருவம் மிகவும் முக்கியமானது அந்த நேரத்தில் துரித உணவுகளையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை உடலில் சந்திக்காத மாற்றத்தை உதிரப் போக்கை முதன் முதலாக பெண் குழந்தைகள் சந்திக்கும் போது உடல் ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அதனால் அந்நேரத்தில் அவர்களுக்கு தேவையான நியூட்டிரிசியன்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பது அவசியம்.

பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. மாதவிடாய் ஆரம்பித்தால் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அல்லது அனீமியா ஏற்படும். அவர்களது உணவில் எப்போதும் இரும்புச் சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பீன்ஸ்,கீரை,முட்டை ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம்.

பருவ வயதில் இருக்கும் குழந்தைகள் ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், உறுப்புகள் திசுக்கள் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிடும். முட்டை,மீன்,பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் ப்ரோட்டீன் அதிகமாக கிடைக்கும்.

உடலில் கால்சியம் சத்து குறைந்தால் அது எலும்பு மற்றும் பற்களை பாதித்து விடும்.
வளரும் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 1200 மில்லி கிராம் வரை கால்சியம் அவசியம். லோ ஃபேட் டயட் மூலமாக கால்சியம் பெறலாம். அதிகமாக கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பருவத்திற்கு வரும் இளம் பெண்களுக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் அவசியமாது. பழங்கள் மற்றும் கீரைகளில் இது அதிகம் காணப்படும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களது டி.என்.ஏவை சரி செய்ய உதவி புரியும். கறி,பருப்பு வகைகளில் ஜிங்க் அதிகப்படியாக இருக்கும். ஒரு நாளில் ஒன்பது மில்லி கிராம் வரை ஜிங்க் அவசியமாகும்.

என்ன தான் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே உடலுக்கு நல்லதுபயக்கும். குறிப்பிட்ட அளவு தான் குடிக்க வேண்டும் என்றில்லாமல் தொடர்ந்து அடிக்கடி குடிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

கண்ணெரிச்சலில் இருந்து தீர்வு தரும் இயற்கை வைத்தியம்


இப்போதைய காலக்கட்டதில் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையைக் காண்பது அரிது. இந்த வாழ்வியல் முறை மாற்றத்தினால் கண்ணெரிச்சல், உடல் எடை அதிகரிப்பு, ஆண்மை குறைவு என பல பிரச்சனைகள் பரிசாய் கிடைத்திருக்கிறது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் குறைபாடாக கருதப்படுவது கண்ணெரிச்சல் தான்.


இதற்கான எளிய வீட்டு முறை வைத்தியம் ஒன்று இருக்கிறது. அது ஒரு ஸ்பெஷல் எண்ணெய், அதை தலைக்கு தேய்த்து குளித்தால் கண்களில் எரிச்சல் குறைந்து, குளிர்ச்சி அடையும். உடல் புத்துணர்ச்சியாகவும் உணர முடியும். இனி அந்த ஸ்பெஷல் எண்ணெய்யை எப்படி எளிதாக வீட்டிலேயே தயார் செய்வது, பயன்பெறுவது என்பதை பற்றி காணலாம்…

அறிகுறிகள் இந்த எளிய வைத்திய முறையை கண் எரிச்சல் மட்டுமின்றி கண் வலி, கண் சிவந்து காணப்படும் போது கூட பின்பற்றலாம்.


தேவையான பொருட்கள்

 இந்த ஸ்பெஷல் எண்ணெயை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும். நல்லெண்ணெய், வெங்காய சாறு, புளிய இலைச்சாறு போன்றவை தான் தேவையான பொருட்கள்.


செய்முறை:

 வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் கொள்ளவும்.

செயல்முறை:

நன்கு கலந்து வைத்துள்ள அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விடவும்

தலைக்கு குளியல் எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, தலைக்கு குளித்து வாருங்கள். பிறகு உங்கள் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.


Aware Of BLUE WHALE - Game of Death

BLUE WHALE

Game of death



இது ஒரு 50 day challenging game

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு task

இந்த game admin-kita இருந்து உங்களுக்கு வரும்

அது என்ன மாதிரியானதுனா

உன் கையில பிளேடு வச்சி 3 தடவ cutபண்ணிக்க
அத என்னக்கு photo எடுத்து அனுப்பு

Morning 4:20-க்குஎழுந்து உன் வீடு மொட்டை மாடிக்கு போய் ஏதாவது ஒரு horror movie பாத்து அத எனக்கு photo எடுத்து அனுப்பு

இந்த மாதிரியான task கொடுக்க படும்

நீங்க கேட்கலாம் நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்

நா பண்ண மாட்டேன்னு அவன்கிட்ட சொல்லவும் முடியாது

நீங்க  ஒரு தடவை இந்த game-la log in பண்ணிடீங்கனா உங்க மொபைலில் உள்ள அணைத்து details-um அவன் கைல போய்டும்

நீங்க இதுவரை பார்த்த விஷயங்கள் msg பண்ணின விஷயங்கள் மற்றும் உங்கள் contact list மொத்தமும் அவனுக்கு போய்டும்

நா சொல்றத பண்ணலேனா நீ செய்த விஷயங்களை உன் பெற்றோர் அல்லது relatives-ku அனுப்பிடுவேன் அப்டின்னு பயம்புருத்துவான்

நீ பயப்படனும்னு கொஞ்ச தகவலை அனுப்பவும் செஞ்சிடுவான்

உங்க வீட்டுல இருந்து கேப்பாங்க

நீயும் அடுத்த விஷயம் leak ஆக கூடாதுனு அவன் சொல்றத வேறு வழி இல்லாமல் செய்ய தொடங்குவ

So, automatically you are forced to play this game

 ஏன் இதை விளையாடனும் ?!

ஏன் இது இவ்ளோ கொடூராமா இருக்குனு தெரிஞ்சும் விளையாடுறாங்க?!

இதற்கு விடை ரொம்ப சின்னது

1) They are all lonely people அதாவது தனிமைல ரொம்ப ஏங்கி போய் இப்டியான game uh பார்தத்தும் அது மேல வர ஒரு விதமான ஈர்ப்பு

 2) ஆர்வக்கோளாறு ..

சரி இதுல என்னதான் இருக்குனு பாத்துருவோம்

அப்புறம் உள்ள போய் உயிர விட்றது !!!

சரி இவங்க எல்லாரும் விரும்பி தான் இதலாம் செஞ்சு suicide பண்ணிக்கிறாங்களானா அதுவும் இல்ல ...

அப்போ என்னதான் நடக்குது இங்க அப்டின்னு பாத்தா

அந்த Blue Whale game online ல கிட்டத்தட்ட 5000 memebers ஆல நடத்தபட்டுட்டு இருக்கு அதுல 85% hackers

 சொன்னா நம்ப மாடீங்க ஆமா இது நடந்துற people எல்லாமே phishing தெரிஞ்சவங்க

அதாவது நல்லா hacking படிச்சு knowledge உள்ளவங்க....

இந்த game uh கண்டுபுடிச்ச அந்த administrator அத அப்டியே இந்த hacking குரூப் கிட்ட குடுத்துட்டான்

so its now been handled by those hackers...

சரி இப்போ இவன் என்ன செய்றான்னா அந்த #BW link உள்ள போய் நீங்க register பண்ணதுமே உங்க account uh hack பண்ணிருவான்

அது உங்க fb id , gmail even உங்க mob num உம் hack பண்ணிருவாங்க...

then உங்க fb accnt ல சம்மந்தனே இல்லாம posts வரும் ...

உங்க accnt uh அசிங்கப்படுத்துவாங்க...

அது மூலமா உங்களுக்கு mental torchure குடுப்பங்க

உங்கள அத செஞ்சே தீரனும் னு pressure பன்வாங்க...and உங்க Num கு calls கூட வரலாம் ...

இவ்ளோ pressure uh நெனச்சி நமக்கே நெனச்சிப்பாக்க பயமா இருக்கும்போது ஒன்னுமே தெரியாத சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க 😞😞

so இப்டிதான் பல உயிர எடுத்துருக்காங்க..

Ok coming to the end இதுக்கு solution ரொம்ப simple ... 1st உங்க வீட்ல or தெரிஞ்ச சின்ன பசங்க யாரா இருந்தாலும் அவங்க அவங்கள அவ்ளோவா net , browsimg லாம் பண்ண விடாதீங்க

அவங்க என்ன net ல பாக்குறங்கன்னு நீங்க check பண்ணிட்டே இருக்குறது நல்லது...

அவங்கள தனியா விட்றது நல்லது இல்ல...

and most important one எக்காரணத்த கொண்டும் எவன் கேட்டாலும் Blue Whale- link-யை தயவு செஞ்சி share பண்ணாதீங்க




Friday, 1 September 2017

ருத்ராட்சையால் குணமாகும் நோய்கள் | Rudhraksha Health Benefits | Organic...





ருத்ராட்சையால் குணமாகும் நோய்கள் | Rudhraksha Health Benefits |  Organic Living https://youtu.be/npUGjAZu8qo

Thursday, 31 August 2017

விவசாயி ஒரு விஞ்ஞானி | Farmers are Scientist | Organic Living



விவசாயி ஒரு விஞ்ஞானி | Farmers are Scientist | Organic Living https://youtu.be/_VtTN7djzCA

ஸ்கிப்பிங் செய்தால் இவ்வளவு நன்மைகளா | Skipping is very Good for health ...





ஸ்கிப்பிங் செய்தால் இவ்வளவு நன்மைகளா | Skipping is very Good for health |Organic Living https://youtu.be/OwDRCI8G2qc

Wednesday, 30 August 2017

நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து | Why Non stick Vessels are bad for heal...





நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து | Why Non stick Vessels are bad for health | Organic Living https://youtu.be/NvKgG_ghWPU

Tuesday, 29 August 2017

கொலுசு அணிவதன் ரகசியம் | Organic Living





கொலுசு அணிவதன் ரகசியம் | Organic Living https://youtu.be/RUoudT9X0Dc

சமூக அறிவியலை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது |How to Remember Social Scie...





சமூக அறிவியலை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது |How to Remember Social Science | IVM Inaiyathil Medhai https://youtu.be/6xj1djyE-Z0

Monday, 28 August 2017

தெரிந்திடாத அரிசி ரகங்களும் அதன் பயன்களும் | Unknown Varieties of Rice a...





தெரிந்திடாத அரிசி ரகங்களும் அதன் பயன்களும் | Unknown Varieties of Rice and Benefits | Organic Living https://youtu.be/C9SRkJbo4J8

Sunday, 27 August 2017

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்க அருமையான வழிகள் | How to be Active ...





நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்க அருமையான வழிகள் | How to be Active whole day | Organic Living https://youtu.be/1GNe9RQNCUw

HIV Cancer போன்ற கொடிய நோய்களை தீர்க்குமா மண்ணுளி பாம்பு | Red Sand Boa ...





HIV Cancer போன்ற கொடிய நோய்களை தீர்க்குமா மண்ணுளி பாம்பு | Red Sand Boa Cure Disease| Organic Living https://youtu.be/dl7hSmUY99s

Saturday, 26 August 2017

நாமும் ஆகலாம் சூப்பர் ஹீரோ அட்டமா சக்திகளால் | Our Great Inner Superior...





நாமும் ஆகலாம் சூப்பர் ஹீரோ அட்டமா சக்திகளால் | Our Great Inner Superior Power | Organic Living  https://youtu.be/THT7Qs9YDCs