Tuesday, 28 March 2017

சீரகம் உடல் எடையை சீராக்கும் | Weight Loss by cumin | Organic Living



அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மசாலா உணவுப் பொருளான சீரகம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றதுஇந்த சீரகத்தை தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள மெட்டபாலிஸம் அதிகரித்து செரிமாணம் சீராகி கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு வருவது தெரியும்.
        ஒரு டீஸ் ஸ்பூன் சீரகப்பொடியை தயிருடன் கலந்து உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும். இரண்டு டீஸ் ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப் போட்டு மறுநாள் காலையில் இந்த நீரை கொதிக்க வச்சு, வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து இரண்டு வாரத்திற்கு தினமும் குடித்து வர உடல் எடை குறையும்.
            தினமும் சூப்புடன் ஒரு டீஸ் ஸ்பூன் சீரகப் பொடியை கலந்து குடித்து வர உடல் எடை குறையும். அதை போலவே அரை டீஸ் ஸ்பூன் சீரகப் பொடியை தண்ணீரில் அத்துடன் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
        சீரகம் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். கெட்ட கொழுப்புக்கள் சேருவதை தடுக்கும். ஏனெனில் இது உடலில் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும் ஆன்டியாக்ஸைடுகளும் ஏராளமாக உள்ளது. இதனால், இந்த சீரகத்தை அன்றாடம் உணவில் எடுத்து வந்தால் கொழுப்புகளால் ஏற்படும் தொப்பையைக் குறைக்கலாம்.
        உடல் எடையைக் குறைப்பதில் எலுமிச்சை, இஞ்சி முதன்மையானவை. இதனுடன் சீரகத்தை சேர்த்துக் கொண்டால் இதன் சக்தி அதிகரிக்கும். இந்த சீரகத்தோட வேறு சில நன்மைகள் என்னவென்று பார்த்தால், இரத்த சோகையை சரி செய்யும். செரிமாணத்தை மேம்படுத்தும், மாரடைப்பை தடுக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குப்படுத்தும், வாயுத் தொல்லையை குணமாக்கும் சக்தி இந்த சீரகத்திற்கு உண்டு.
        எனவே சீரகத்தை நம் உணவில் சேர்ப்போம்: சிறப்பாக வாழ்வோம்:

சீரகம் உடல் எடையை சீராக்கும் | Weight Loss by cumin | Organic Living  https://youtu.be/JT8nIjLSsZ4

Monday, 27 March 2017

சளி சமந்தப்பட்டவை தீர | Home Remedy for Cold Cough| Organic Living



சளி சமந்தப்பட்டவை தீர | Home Remedy for Cold Cough| Organic Living https://youtu.be/B95S6iZdKUM

விக்களுக்கும் கொட்டாவிக்கும் உடனடி ஆறுதல் | Instant remedy for Hiccups a...





விக்களுக்கும் கொட்டாவிக்கும் உடனடி ஆறுதல் | Instant remedy for Hiccups and Yawning | Organic Living https://youtu.be/cW4fkxGgrTU

வாயால் வரும் நோய் | Eating habit will decide the disease | Organic Living





வாயால் வரும் நோய் | Eating habit will decide the disease | Organic Living  https://youtu.be/p3KOfV5eGpg

இடது கை அறிவியல் | பீச்சாங்கை அறிவியல் | Left handers are intellegence |...





இடது கை அறிவியல் | பீச்சாங்கை அறிவியல் | Left handers are intellegence | Organic Living https://youtu.be/NprjfDKjGuE

துர்நாற்றம் நீங்கனுமா | Do you want to get rid of Bad Smell | Organic Li...





துர்நாற்றம் நீங்கனுமா | Do you want to get rid of Bad Smell | Organic Living https://youtu.be/Wdj4YYjlYwg

Sunday, 26 March 2017

40 வகை கீரைகளும் அதன் பயன்களும் | 40 Kinds of Greens and its benefits | ...




நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நாம் எவ்வளவுதான், நம் உடல் நலத்தில் கவனம் செலுத்தினாலும் சில நேரங்களில் நோய் தாக்குதல்களினாலும் ஒவ்வாமையினாலும் நம் உடம்பு பாதிக்கப்படுகின்றது. இதெல்லாம் சாதாராண பிரச்சனைகள்தான். அன்றாடம் நாம் உணவினைக் கொண்டே இதை சரி பண்ணலாம். அதிலும் கீரை வகைகள் குறிப்பிடத்தக்கது. அது, நம் உடலில் வரும் பிரச்சனைகளை தீர்க்கின்றது. 40 வகையான கீரைகளைப் பற்றி இப்போ காணலாம்.

   அகத்திக்கீரை, இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தைத் தெளிய வைக்கும். காசினிக்கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்சிறுபசலைக் கீரை, சரும நோய்களை நீக்கும். பால்வினை நோய்களை குணமாக்கும். .பசலைக் கீரை, தசைகளை பலமாக்கச் செய்யும். கொடிபசலைக் கீரை, வெள்ளை விலக்கும். நீர்க்கடுப்பை நீக்கும். வல்லாரைக் கீரை, மூளைக்குப் பலம் தரும். முடக்கத்தான் கீரை, கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும். புண்ணாக்கு கீரை, சிரங்கு சீதளமும் விலகும். பொதினாக் கீரை, இரத்தம் சுத்தம் செய்யும். அஜீரணத்தை போக்கும். நஞ்சுண்டான் கீரை, விஷத்தை முறிக்கும்தும்மை கீரை, அசதி, சோம்பல் நீக்கும். மஞ்சள் கரிசலைக் கீரை, கல்லீரலை பலமாக்கும். காமாலையை விலக்கும். குப்பைக் கீரை, பசியைத் தூண்டும். வீக்கம் வத்த வைக்கும். புளியங்கீரை, சோகையை விலக்கும். கண் நோய் சரியாகும்பிண்ணாக்கு கீரை, வெட்டியை, நீர்க்கடுப்பை நீக்கும். முள்ளங்கி கீரை, நீரைடைப்பை நீக்கும். பருப்புக் கீரை, பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்புளிச்சகீரை, கல்லீரலை பலமாக்கும். மாலைக் கண் நோயை விலக்கும். மணலிக் கீரை, வாதத்தை விலக்கும். கவத்தைக் கரைக்கும்.. மணத்தக்காளிக் கீரை, வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை குணமாக்கும். தேமல் போக்கும்.. முளைக்கீரை, பசியை ஏற்படுத்தும். சக்கரவர்த்தி கீரை, தாது விருத்தியாகும். வெந்தயக் கீரை, மலச்சிக்கலை நீக்கும்.கல்லீரல், மண்ணீரலை பலமாக்கும். வாத காச நோய்களை குணமாக்கும். தூதுவளைக் கீரை, சரும நோயை விலக்கும். சளித் தொல்லையை நீக்கும். பரட்டைக் கீரை, பித்தம், கபம் நோய்களை விலக்கும்பொன்னாங்கன்னி கீரை, உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். சுக்குக்கீரை, இரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு, மூலத்தைப் போக்கும். வெள்ளைகரிசலங்கீரை, இரத்த சோகையை நீக்கும். முருங்கைக்கீரை, நீரழிவை நீக்கும். கண்கள், உடல் பலமாகும். தவசிக்கீரை, இருமலைப் போக்கும்.. சானக்கீரை, காயம் ஆற்றும். வெள்ளைக்கீரை, தாய்ப்பாலை பெருக்கும். விழுதுக் கீரை, பசியை தூண்டும்.. கொடிக்காசினிக்கீரை, பித்தம் போக்கும். துயிலிக் கீரை, வெள்ளை வெட்டை விலக்கும்.
       
   பார்த்தீர்களா. கீரையில் இவ்வளவு நன்மைகளா!!!. நண்பர்களே நம் அன்றாட வாழ்வில்  ஒரு நாளைக்கு ஒரு கீரை வகையாவது உண்போம். நம் உடல் நலத்தை பேணிக் காப்போம்.


40 வகை கீரைகளும் அதன் பயன்களும் | 40 Kinds of Greens and its benefits | Organic Living https://youtu.be/YUvKkaApM3Y