Monday, 13 March 2017

வெந்தயம் நல்ல வைத்தியம் | Health Benefits of Fenugreek | Organic Living



கடன் பிரச்சனையை விடகாலைக் கடன் பிரச்சனை ரொம்பவே மோசமான நிலைமையில் உள்ளது. இதனால், காலையில் அவஸ்திப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பிரச்சனையால் சில பேருக்கு அலுவலகம் செல்லக் கூட நேரமாகி விடுகின்றது. அப்புறம் அலுவலம் சென்று, மேலதிகாரியிடம் தாமதத்திற்கான காரணமாக, போக்குவரத்து நெரிசல் என்று பொய் கூற வேண்டியதுள்ளது. மேலதிகாரியும் எந்த போக்குவரத்து நெரிசல் என்று தெரியாமல் விழிப்பார். பாவம்
        சரிங்க, இந்த கடும் பிரச்சனையை உடனே நீக்கலாம். மலச்சிக்கல் பிரச்சனையை பற்றித்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதனால், மனதளவில் பாதிக்கப்படுவோர் அதிகளவில் இருக்கின்றார்கள். இதை சரி செய்ய நிறைய மருந்துகள் இருக்கின்றது. இதை தவிர பல காய்கள் இருக்கு, ஆனால், இதையெல்லாம் பயன்படுத்தாத சூழ்நிலை பலபேருகிட்ட இருக்கின்றது. ஆனல், அனைவரின் வீடுகளிலும் அடுப்பனையில் இருப்பது வெந்தயம். உடலில் அதிகமா உஷ்ணம் இருந்தால், இந்த பிரச்சனை வரும்.

    அதற்கு குளிர்ச்சியா இருக்கின்ற, இந்த வெந்தயத்தை முதல் நாள் இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் ஓடியே போய்விடும். இந்த வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, தினமும் மோரிலோ, வெந்நீரிலோ  அந்த வெந்தயப் பொடியோடு, கொஞ்சம் பெருங்காயப் பொடியை கலந்து குடித்தால், உடலில் உள்ள உஷ்ணத்தையும், கேஸையும், இதனால் வரக்கூடிய வயிற்று வலியையும் போக்கி விடும். இதை சக்கரை நோய் உள்ளவர்களுக்கு காப்பியில் கலந்து கொடுத்தால், சக்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும். நம் உடலுக்கு தேவையான புரதம், சக்கரை, வைட்டமின்கள், உலோகச்சத்துக்கள் நிறைய இருக்கும். இதே போல் வெந்தயக்கீரையும் ரொம்பவே நல்லது.  இதில் கால்சியம் சத்து நிறையவே இருக்கின்றது. இதனால் கால்சியம் சத்தும் உள்ளது. இதனால் எழும்புகளும் வலுப்பெறும். இதனுடைய பல நன்மைகளைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்.
        இவ்வளவு பலன்களை அளிக்கும் வெந்தயத்தை தினமும் உண்டு பயனடைந்து வாழுங்கள் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன்!



வெந்தயம் நல்ல வைத்தியம் | Health Benefits of Fenugreek | Organic Living

https://youtu.be/QgvYtLjjKr4

இளநீரே கதாநாயகன் குளிர்பானம் வில்லன் | Benefits of Coconot | Effects of ...


  
 “அப்பாடா வெயில் மண்டையை பொளக்குது”… அப்படீன்னு புலம்புவது, இனிமே அடிக்கடி நடக்கும். பொண்ணுக எல்லாரும் வெயிலில் இருந்து தப்பிக்க, முகமூடி எல்லாம் போட்டுக்கிட்டு பாவம் தீவிரவாதி மாதிரி திரிவாங்க.
        குழந்தைகள் ரொம்ப பாவம். வேர்க்குரு நீர்க்கடுப்புன்னு ரொம்பவே அவஸ்தைபடுவாங்க. வயசானவங்க கூட இதில் ரொம்ப பாதிக்கப்படுவாங்க.
        இந்த நேரத்தில், நம்ம அனைவரையும் காப்பாற்ற ஹீரோ மாதிரி ஒருத்தர் வருவாரு பாருங்க. அவரு பேருதான் இளநீர். அடஅதை பார்த்தால் கூட உடம்பு சும்மா ஜில்லின்னு ஆயிடும். ஆனால், நம்ம மனசை மாத்த வில்லன் மாதிரி ஒன்று இருக்கும் பாருங்க. அதுக்கு பேருதான் கூல்ட்ரிங்ஸ்.
        முதலில், நாம் குடிக்கும் குளிர்பானங்களில் என்ன இருக்குதுன்னு பார்க்கலாம். அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்க பென்சாய்க் என்ற அமிலம் இதில் உள்ளது. நமது தோலை சீக்கிரம் கெட்டு போகச் செய்கின்றது. நிறத்திற்காக அராபிக்கம் எனப்படும் ஒருவகை கோந்து, மற்றும் இரசாயண வண்ணங்கள், இது ஒரு ஆபத்தான கலவை. அந்த வண்ணங்கள் மாறாமல் இருப்பதற்கு சல்பர்டைஆக்ஸைடுஇது இதயத்தை பாதிக்கும். நறுமணமாக இருக்க காபின், இது போதை மருந்துகளில் கலக்கப்படும் ஒரு பொருள். இது, நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும். இது எல்லாத்துக்கூடேயும் ஒரு டம்ளர் தண்ணீர். இந்த விஷத்துக்குப் பேருதான் கூல்ட்ரிங்ஸ்.

        இப்போது, நாம் பார்க்க போறது நம்ம ஹீரோ இளநீர். இதை வெறும் வயிற்றில் குடிச்சாலும் சரி, இல்ல வேறு எப்போது குடித்தாலும் சரி, அது நமக்கு எப்போதும் நன்மையே செய்யும். இளநீரில் இயற்கையாகவே குளுக்கோஸ் இருப்பதால், அதை குடித்த உடனே மூளையும் உடலும் சுறுசுறுப்பா ஆயிடும். அப்புறம் நம்ம சும்மா பறந்து பறந்து வேலை செய்ய ஆரம்பிச்சிடலாம். நாம், நமது வேலையை பார்க்க ஆரம்பிச்சா, நாம் குடிச்ச இளநீர் அதனுடைய வேலையை பார்க்க ஆரம்பிச்சுடும். முதல் வேலையா, இரத்தத்தை சுத்தம் பண்ண ஆரம்பிச்சுடும். கல்லீரல் நன்றாக இயங்கவும், தோலை சிவப்பாகவும் பளபளப்பாகவும், இளமையாகவும், மினுமினுப்பாகவும் வைக்க உதவும்பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது  சிறுநீரில் கற்கள் வராமல் தடுக்கும்.
        இளநீரில் பி.காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், வைட்டமின் சி, மற்றும் மிக குறைந்த அளவு கொழுப்பு இன்னும் பல சத்துக்கள் இருப்பதால், இதை குடித்தவுடன் வயிறு நிறைந்துவிடும். உணவோட அளவு குறைந்துவிடும். பருமனாக இருப்பவர்களுடைய எடை சுலபமாக குறைந்துவிடும். வயிற்றுப் போக்கு அதிகமாக இருக்கும் போது உடலில் நீர்ச் சத்து அதிகமா குறைந்திடும். அந்த நேரத்தில் இளநீர் குடிப்பது மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். இவ்வளவு பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும் இளநீர் உண்மையிலேயே ஹீரோதான்.

        அதனால், விஷம் என்கின்ற கூல்ட்ரிங்ஸை தூக்கி போட்டு விட்டு, அமிர்தமாய் இருக்கும் இளநீரை குடிக்க ஆரம்பிக்கலாம்


இளநீரே கதாநாயகன்
குளிர்பானம் வில்லன்
| Benefits of Coconot | Effects of Cool drinks |
Organic Living